2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வருகிறது கூகுளின் அடுத்த திறன்பேசி

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 23 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி, ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நிகழ்வொன்றை நடத்தவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில், தனது புதிய திறன்பேசிகளை கூகுள் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திகதி, திறன்பேசி வடிவிலான செவ்வகம், கூகுளின் “G” என்ற வர்த்தக நாமத்தை வெளிப்படுத்துகின்ற குறுகிய டீஸர் காணொளியை யூடியூப்பில் கூகுள் தரவேற்றியுள்ளது. தவிர, திகதியையும் கூகிளால் உருவாக்கப்பட்ட ஏதாவது என்ற தகவலை வெளிப்படுத்துகின்ற புதிய இணையத்தளத்தையும் ஆரம்பித்துள்ளது.

எவ்வாறு புதிய திறன்பேசிகள் அழைக்கப்படும் என இதுவரையில் கூகுள் உறுதிப்படுத்தாதபோதும், Nexus என்ற வர்த்தக நாமத்தை கூகுள் கைவிடுமென்றும், அதற்குப் பதிலாக, தனது “G” என்ற இலட்சினையை, வரவுள்ள புதிய சாதனங்களில் பிரதியீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, Pixel X, Pixel XL என்ற, முறையே ஐந்து அங்குலம், ஐந்தரை அங்குலம் அளவிலான HTCயினால் தயாரிக்கப்பட்ட இரண்டு திறன்பேசிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, குறித்த இரண்டு திறன்பேசிகளும் உலோக வடிவமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் வெளியிடப்பட்டதில், Nexus 6P உலோக வடிவமைப்பாக இருந்ததுடன், 5.2 அங்குல LG 5X பிளாஸ்டிக்காக இருந்திருந்தது.

எவ்வாறெனினும் புதிய கூகுள் சாதனங்கள் எவ்வாறான உள்ளீடுகளைக் கொண்டிருக்கும் என்பது தெளிவில்லாமல் உள்ளபோதும், Nexus வரிசை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தான திட்டத்தை கூகுள் கடைப்பிடிக்குமாயின், இறுதியாக வந்த சிறந்த processorகளை குறித்த திறன்பேசிகளில் எதிர்பார்க்கலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .