2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விண்ணைத்தொடும் மின்தூக்கி…

Editorial   / 2018 மார்ச் 26 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விண்ணில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கோ செய்மதிகளை சரிபார்ப்பதற்கோ, விண்ணிற்கு விஞ்ஞானிகளை அனுப்ப வேண்டும் என்றால், விண்வெளி ஓடங்கள் (rockets) மூலமே அனுப்ப வேண்டிய நிலையுள்ளது. இதற்கான செலவு மிகவும் அதிகமானதாகும்.

இதற்கு மாற்றீடாக விண்ணுக்கும் புவிக்கும் இடையே மின் தூக்கியொன்றை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம்  ஒன்று, பேச்சளவில் இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது, இத்திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் ஆலோசகரான  ‘Peter Debney’  இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

எனினும் இத்திட்டம் திறம்பட இயங்குவதற்கு, 100 வருடகாலம் வரை கூட எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். 2035 இல் இத்திட்டம் திறம்பட இயங்கும் என, வேறு பல திட்ட ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கான உத்தேச செலவு 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். திட்டம் நிறைவேறினால், விண்ணுக்கு ஒரு கிலோகிராம் நிறையை கொண்டு செல்ல,  225$ க்கும் குறைவாகவே முடியும் என்று கூறப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X