2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தியா, நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மீள் பார்வை

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 13 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், இந்திய அணி எதிர்பார்த்திலும் பார்க்க மிகப்பெரிய தொடர் வெற்றியை  இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. ஒட்டு மொத்த இந்திய அணியினதும் திறமை இதுவென்றே கூற முடியும்.

இரவிச்சந்திரன் அஷ்வின், அஜிங்கையா ரஹானே, செட்டேஸ்வர் புஜாரா ஆகியோர்  இந்த டெஸ்ட் தொடர் வெற்றிக்கு முக்கியமான காரணமாக கூறலாம். ஆனாலும் எல்லா வீரர்களுமே இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பினை வழங்கியமையே இந்த தொடர் வெற்றிக்கு முக்கியமான காரணம். இந்தத் தொடர் வெற்றியின் மூலம் டெஸ்ட் தரப்படுத்தலில் மீண்டும் முதலிடத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்த முதலிடத்தை இந்திய அணி தொடர்ந்து வைத்துக்கொள்ளவும் வாய்ப்புகளும் உள்ளன. அடுத்ததாக, இங்கிலாந்து தொடர், இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ளது. ஐந்து போட்டிகள் அடங்கிய அந்தத் தொடரை இந்தியா அணி வெற்றி பெற்றால் அவர்களுக்கு முதலிடம் தொடர வாய்ப்புகள் உள்ளன.

இந்தத் தொடரின் ஆரம்பத்தில், இந்தத் தொடர் வெற்றி, இந்திய அணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இவ்வளவு இலகுவாக கிடைக்கும் என  எதிர்பார்க்கப்படவில்லை. நியூசிலாந்து அணி வீரர்கள் சிலர் உபாதையடைந்தமை, இந்தியா அணியின் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் போனமை இவர்களின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. 60 விக்கெட்களில் 41 விக்கெட்களை, சுழற் பந்துவீச்சாளர்களுக்கு, நியூசிலாந்து அணியினர் இழந்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு மோசம் என்று சொல்வதற்கில்லை. முதலிரு போட்டிகளிலும் சிறப்பாகவே பந்துவீசியிருந்தனர். இறுதிப் போட்டியிலேயே, அவர்களின் பந்து வீச்சு மோசமாக அமைந்தது. துடுப்பாட்டம் மோசமாக அமைந்தமையே, இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி தோல்விகளை சந்திக்கவும், இந்தியா அணிக்கு சவால்களையும் வழங்க முடியாமலும் போனது.

இந்திய அணி, இந்த அணியை பரீட்சிப்பதற்கு அல்லது இதுதான் எதிர்கால  இந்தியா டெஸ்ட் அணி என முடிவெடுக்க இந்தத் தொடரை பாவித்தது. அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அவர்களின் ஆரம்பத் துடுப்பாட்ட இடம் மட்டுமே இந்தத் தொடரில் சரியாக அமையவில்லை. உபாதைகள், கிடைத்த போட்டிகளில் வீரர்கள் ஓட்டங்களை பெறவில்லை என்ற நிலைமைகள் காணப்பட்டன. முரளி விஜய்யின் ஜோடி யார் என்பதே இனிக் கேள்வி. மூவர் அந்த இடத்துக்கு போட்டியில் உள்ளனர். லோகேஷ் ராகுல் உபாதையிலிருந்து மீண்டு வந்தால் ஷீகர்  தவான், கெளதம் கம்பீர் ஆகியோரின் இடம் இல்லாமல் போகும் நிலை உள்ளது.

மூன்றாமிடம் இந்திய அணிக்கு முழுமை பெற்றுவிட்டது. செட்டேஸ்வர் புஜாரா தொடரில் கூடிய ஓட்டங்களை பெற்று அந்த இடத்தை நிலையாக கைப்பற்றிவிட்டார். நான்காமிடம் விராத் கோலி. கடந்த தொடர் போன்றே இவருக்கு இந்த தொடர் சிறப்பாக அமையவில்லை. இரட்டைச் சதம் ஒன்று மட்டுமே. மற்றைய போட்டிகளில் அரைச்சசத்தை கூட தொடவில்லை. ஒரு போட்டியில் ஒரு பெரிய ஓட்ட எணிக்கை, மற்றைய போட்டிகளில் குறைந்த ஓட்டங்கள் என்பதனை முன்னிலை துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து எதிர்பார்க்கக்கூடாத விடயம்.

அஜிங்கையா ரஹானே மிக அபாரமாக இந்த தொடரில் ஓட்டங்களை குவித்தார். தொடர்ச்சியான ஓட்டங்களை குவித்து வருகின்றார். ஆறாமிடத்தில் தனது இடத்தை ரோஹித் ஷர்மா இறுக்கமாக கைப்பற்றிவிட்டார். இவரின் இடம் கேள்விக்குறியாக இருந்தது வந்தது. இந்தத் தொடரில் அவர் பெற்றுக்கொடுத்த ஓட்டங்கள் அணிக்கு மிகத்தேவையான நேரத்தில் பெறப்பட்டவை. இரவீந்திர ஜடேஜா, அடுத்த இடத்தில் ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அதே போன்று ரித்திமான் சஹா பெற்றுக்கொடுத்த இரண்டு அரைச்சதங்கள் அணிக்கு தேவையான நேரத்தில் மிகவும் கைகொடுத்தது. இந்த இடத்தில இவர் பெற்றுக் கொடுக்கும் ஓட்டங்கள் அணிக்கு மிகவும் தேவையானவை. அஷ்வின் துடுப்பாட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை.

பந்துவீச்சில் அஷ்வின், ஜடேஜா ஜோடி விக்கெட்களை அள்ளி எடுக்க, தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் சரியாக பாவித்தனர். உமேஷ் யாதவ் முதற் போட்டியில் சரியாகப் பந்து வீசவில்லை. அடுத்த போட்டியில்  புவனேஷ்வர் குமார் ஐந்து விக்கெட்களை கைப்பற்றி னாலும் தந்தாலும் உபாதை காரணமாக அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இஷாந்த் ஷர்மா காய்ச்சல் காரணமாக இந்த தொடர் முழுவதும் விளையாடவில்லை. எனவே உமேஷ் யாதவின் நிலைமை அடுத்த தொடரில் என்ன நிலைமை எனபதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். இந்த அணி தற்போது சமபலமான நிலையான அணியாக உருவாகியுளளது. இங்கிலாந்து தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த அணியில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்க தேவையில்லை. 

நியூசிலாந்து அணியில் எதிர்பார்த்த வீரர்கள் துடுப்பாட்டத்தில் மிக மோசமாக தடுமாறியமை மிகப்பெரிய ஏமாற்றமே. குறிப்பாக கேன் வில்லியம்ஸன், ரொஸ் டெய்லர் ஆகியோர் முழுமையாக ஏமாற்றிவிட்டனர். உபாதை காரணமாக, வில்லியம்ஸன் , இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளிலும் 135 ஓட்டங்கள் மட்டுமே. ரொஸ் டெய்லர் 100 ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை.

எதிர்பார்க்காத லுக் ரொங்கி, தொடரில் நியூசிலாந்து அணி சார்பாக கூடுதலான ஓட்டங்களை பெற்றவர். இவர், ஜிம்மி நீஷமின் உபாதை காரணமாகவே அணியில் இடம் பிடித்தார். டொம் லதாம், ஓரளவு சராசரியான ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில், மிற்செல் சான்ட்னர் இந்திய அணிக்கு சவால்களை வழங்கினார். குறிப்பாக முதற் போட்டியில், இந்தியா அணிக்கு,  நியூசிலாந்து சுழற் பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தல் வழங்கினர். அந்த அச்சுறுத்தல் முதற் போட்டியின் முதல் இன்னிங்ஸோடு நின்று போனது.

இரண்டாவது போட்டியில் ஒட்டு மொத்த பந்துவீச்சு இந்திய அணியை தடுமாற வைத்தது. நியூசிலாந்து அணி சிறப்பாக துடுப்பாடியிருந்தால் இரண்டாவது போட்டியில் வெற்றி என்ற ஒரு நிலையை நியூசிலாந்து அணி யோசித்து இருக்க முடியும். இரண்டாவது போட்டியில் முழுக்க முழுக்க துடுப்பாட்ட பக்கமே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இறுதி போட்டி மனதளவில் நிச்சயம் இல்லாமை, நியூசிலாந்து அணிக்கு பெரும் அடியாக அமைந்தது. தோல்விகளை சமாளிக்க முடியாமல் மிக மோசமாக மூன்றாவது போட்டியில் அடிவாங்கினர்.

 

தொடரில் 100 ஓட்டங்களை தாண்டியவர்கள்

 

செட்டேஸ்வர் புஜாரா                        3              6              373         101*      74.60     50.20     1              3             

அஜிங்கையா ரஹானே                    3               6              347         188         69.40     51.02     1              1             

விராத் கோலி                                     3              6              309         211         51.50     57.54     1              0             

ரோஹித் ஷர்மா                                 3              5              238         82           79.33     64.85     0              3             

லுக் ரொங்கி                                         3              6              200         80           33.33     58.99     0              1             

டொம் லதாம்                                        3              6              194         74           32.33     45.11     0              3             

முரளி விஜய்                                         3              6              186         76           31.00     41.89     0              2             

மார்ட்டின் கப்தில்                                  3              6              159         72           26.50     52.64     0              1             

மிற்செல் சான்ட்னர்                             3              6              159         71           26.50     39.55     0              1             

கேன் வில்லியம்ஸன்                         2              4              135         75           33.75     53.14     0              1             

இரவீந்தர ஜடேஜா                              3              5              129         50*         64.50     78.65     0              1             

ரித்திமான் சஹா                                   3              3              112         58*         112.00   54.10     0              2             

பிரட்லீ வட்லிங்                                      3              6              111         25           22.20     40.95     0              0             

 

தொடரில் 5 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள் 

இரவிச்சந்திரன் அஷ்வின்     3    6           146.3     480         27           7/59       13/140  17.77     3.27       

இரவீந்தர ஜடேஜா                 3     6           144.0     337         14           5/73       6/131     24.07     2.34       

ட்ரெண்ட் போல்ட்                  3     6           106.4     333         10           3/38       5/84       33.30     3.12       

மிற்செல் சான்ட்னர்              3     6           155.2     524         10           3/60       5/173     52.40     3.37       

மொஹமட் ஷமி                   3     6           75.1        243         8              3/46       6/116     30.37     3.23       

புவனேஷ்வர் குமார்               1     2           27.0        76           6              5/48       6/76       12.66     2.81       

மற் ஹென்றி                           2     4           82.0        254         6              3/46       6/105     42.33     3.09       

ஜீதன் பட்டேல்                         2     4           83.0        292         6              2/56       4/176     48.66     3.51       

நீல் வக்னர்                                 2   4           66.0        196         5              2/42       3/102     39.20     2.96       

 

போட்டி முடிவுகள்

முதற் போட்டி

இந்தியா அணி 197 ஓட்டங்களினால் வெற்றி

இந்தியா - 318/10

முரளி விஜய் -65, செட்டேஸ்வர் புஜாரா 62

ரென்ட் போல்ட் - 67/3, மிற்செல் சான்ட்னர் - 94/3

 

நியூசிலாந்து - 262/10

கேன் வில்லியம்ஸன் - 75, டொம் லதாம் 58

இரவீந்தர ஜடேஜா - 73/5, இரவிச்சந்திரன் அஷ்வின் - 93/4

 

இந்தியா - 377/5

முரளி விஜய் -76, செட்டேஸ்வர் புஜாரா 78

மிற்செல் சான்ட்னர் - 79/2, இஷ் சோதி - 99/2

 

நியூசிலாந்து - 236/10

லுக் ரொங்கி -  80, மிற்செல் சான்ட்னர் - 71

இரவிச்சந்திரன் அஷ்வின் - 132/6, மொஹமட் ஷமி 18/2

 

போட்டி நாயகன் இரவீந்தர ஜடேஜா

 

இரண்டாவது  போட்டி

இந்தியா அணி 178 ஓட்டங்களினால் வெற்றி

இந்தியா - 316/10

செட்டேஸ்வர் புஜாரா 87, அஜிங்கையா ரஹானே 77

மற் ஹென்றி 46/3

 

நியூசிலாந்து - 204/10

ஜீதன் பட்டேல் - 47

புவனேஷ்வர் குமார்  - 48/5, மொஹமட் ஷமி 70/3

 

இந்தியா - 263/10

ரோஹித் ஷர்மா 82, ரித்திமான் சஹா 58

மற் ஹென்றி 59/3, மிற்செல் சான்ட்ன - 60/3, ட்ரெண்ட் போல்ட் 38/3

 

நியூசிலாந்து - 197/10

டொம் லதாம் - 74

இரவிச்சந்திரன் அஷ்வின் - 82/3, மொஹமட் ஷமி 46/3, இரவீந்திர ஜடேஜா 41/3

 

போட்டியின் நாயகன் - ரித்திமான் சஹா

 

மூன்றாவது   போட்டி

இந்தியா அணி 321 ஓட்டங்களினால் வெற்றி

இந்தியா - 557/5

விராத் கோலி 211, அஜிங்கையா ரஹானே 188

ட்ரெண்ட் போல்ட் 113/2, ஜீதன் பட்டேல் 120/2

 

நியூசிலாந்து - 299/10

மார்ட்டின் கப்தில் 72, ஜிம்மி நீஷம் 71

இரவிச்சந்திரன் அஷ்வின் - 81/6,  இரவீந்தர ஜடேஜா 80/2

 

இந்தியா - 216/3

செட்டேஸ்வர் புஜாரா 101, கெளதம் கம்பீர் 50

ஜீதன் பட்டேல் 56/2

 

நியூசிலாந்து - 153/10

ரொஸ் டெய்லர் - 32

இரவிச்சந்திரன் அஷ்வின் - 59/7, இரவீந்திர ஜடேஜா 45/2

 

போட்டியின் நாயகன் - இரவிச்சந்திரன் அஷ்வின் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .