2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உலகக் கிண்ணம்: குழு சி

Editorial   / 2018 ஜூன் 27 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் மூன்றாவது குழுவான குழு C இன் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்தக் குழு பெரியளவில் இறுக்கமான சுவாரசியமான குழுவாக அமையவில்லை. முதலிரு போட்டிகள் நிறைவடைந்த போதே பிரான்ஸ் அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. டென்மார்க்  அணியும் கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது போன்ற நிலை காணப்பாடலும் முழுமையான தகுதியினை பெறவில்லை. அவுஸ்திரேலியா அணி பெரு அணியினை வெற்றி பெறவேண்டும். அதுவும் 3 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும். மறுபுறத்தில் டென்மார்க்  அணி சமநிலை முடிவினை பெறவேண்டும் என்ற நிலை காணப்பட்டது. இது கடினமான நிலை என்றாலும் அவுஸ்திரேலியா மற்றும் டென்மார்க்  அணிகளுக்கிடையிலான போட்டியில் சமநிலை பெறப்பட்டமையினால் பெரு அணியினை அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் போகவில்லை.

பிரான்ஸ் அணி டென்மார்க் அணியுடனான போட்டியில் சாதாரணமான நிலையில் விளையாடினார்கள். அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில் டென்மாக் அணியுடன் மிக மோசமான தோல்வியினை சந்திக்காமல் விட்டாலே முதலிடம் அவர்களுக்கு கிடைக்கும். எனவே வீரர்களை அதிகம் கஷ்டப்படுத்தாமல் சாதாரணமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு வீரர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்ற முனைப்பில் விளையாடியமையை காண முடிந்தது. பெரு மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் பெரு அணி  ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றமையினால டென்மார்க் அணியின் வாய்ப்புகள் கூட இலகுவானது. ஆனாலும் டென்மார்க் அணி இறுதி வரை போராடிய போதும் கோல்களை அடிக்க முடியவில்லை. இதேவேளை இந்த உலக கிண்ணம் ஆரம்பித்து 38வது போட்டியிலேயே கோல்கள் அற்ற முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது என்பது முக்கிய விடயம்.

பிரான்ஸ் அணி இளவயது அணியாக சிறப்பாக செயற்படுகிறது. அவுஸ்திரேலிய மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டிகள் இறுக்கமாக இருந்த போதும் தங்கள் ஆதிக்கத்துக்கள் போட்டிகளை வைத்து அழுத்தங்களின்றி போட்டிகளை வெற்றி பெற்றுக்கொண்டார்கள். இலகுவான குழு ஒன்று இவர்களுக்கு கிடைத்துவிட்டது என்றும் கூட கூறலாம்.

பிரான்ஸ் அணிக்கு அடுத்த சுற்றுப் போட்டி ஆர்ஜன்டீனா அணியுடன் கிடைத்துள்ளது. குழு D இல் ஆர்ஜன்டீனா  அணி இரண்டாமிடத்தை பெற்றுள்ள போதும்  பலமான அணி. ஆனால் அவர்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தடுமாறியுளார்கள் என்பது பிரான்ஸ் அணிக்கு பலத்தினை வழங்கும். கடந்த உலகக்கிண்ண தொடரில் காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி இம்முறை அதனை தாண்டி செல்ல முயற்சிக்கும். மற்றைய அணிகள் போன்று மிகப் பெரிய பெயர் சொல்லும் நட்சத்திரங்கள் பிரான்ஸ் அணியில் இல்லை. அவர்கள் அதிகமாக நம்புவது அன்டோனி கிரைஸ்மன் என்ற வீரரை. ஆக்ரோஷமற்ற சாதுவான முகம். ஆனால் இவரின் விளையாட்டு மிகவும் சிறப்பானது. எதிர்காலத்தில் உலகின் சிறந்த வீரராக வருவார் என நம்பப்படுபவர். இந்த உலக கிண்ண தொடரில் தனது அணிக்கான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து தான் உலகின் சிறந்த வீரர்களுக்குள் முன்னணி வரிசைக்கு வந்துவிட்டேன் என்பதனை நிரூபிப்பாரா என பார்க்கலாம்.

பிரான்ஸ் அணி ஏழாமிடத்திலும், ஆராஜன்டீனா அணி ஐந்தாமிடத்திலும் தரப்படுத்தல்களில் காணப்படுகின்றன. பந்தயக்காரர்கள் பிரான்ஸ் அணிக்கான வெற்றி வாய்ப்புகளை அதிகம் வழங்கியுள்ளார்கள். உலகக்கிண்ணத்தை வெற்றி பெற வாய்ப்புள்ள ஆறாவது நாடாக பிரான்ஸ் அணியும், எட்டாவது நாடாக ஆர்ஜன்டீனா அணியும் பந்தயக்காரர்களினால் தரப்படுத்தப்பட்டுள்ளன.  ஆனால் இவர்கள் வழங்கியுள்ள நிகழ்தகவுகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இறுக்கமான போட்டியினை எதிர்பார்க்க முடியும்.

டென்மார்க் அணி முதற் போட்டியில் பெரு அணியினை வெற்றி பெற்றுக் கொண்டது. இதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பினை இலகுபடுத்திக் கொண்டவர்கள் அடுத்த அவுஸ்திரேலியா அணியுடன் வெற்றி பெற முடியாமல் போனமையினால் இவர்களின் இரண்டாம் சுற்று தெரிவில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் முதல் சுற்றின் மூன்றாம் கட்டப் போட்டிகளின் முடிவுகளின் படி அடுத்த சுற்று வாய்ப்பு கிடைத்து விட்டது.  ஐந்தாவது உலகக்கிண்ணத்தில் விளையாடும் டென்மார்க் அணி நான்காவது தடவையாக இரண்டாம் சுற்றில் விளையாடவுள்ளது. 98 ஆம் ஆண்டு காலிறுதி வரை முன்னேறினார்கள். இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ள இவர்கள் அடுத்த சுற்றுடன் வெளியேறிவிடுவார்கள் என நமபகமாக சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுளள்து. அதற்கு காரணம் குழு D இல் முதலிடம் பெற்றுள்ள குரேஷியா அணி. இவர்களின் வெற்றிகளின் பின்னர் இவர்களுக்கான உலகக்கிண்ண வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆகையால் டென்மார்க் அணி குரேஷியா அணியினை வெற்றி பெற மிகப்பெரியளவில் போராட்டம் நடாத்த வேண்டும்.

1980 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் இம்முறை உலகக்கிண்ணத்துக்கு தென்னைமரிக்க கண்டத்திலிருந்து தகுதி பெற்ற பெரு அணி அவுஸ்திரேலியா அணியுடன் 2-0 என ஆறுதல் வெற்றி ஒன்றினை பெற்றுக்கொண்டார்கள், இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக காணப்பட்டன. அதன் மூலம் அவுஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகளுக்கிடையில் அடுத்த சுற்றுக்கு போட்டி உருவாகும் என்ற நிலை காணப்பட்ட போதும் பெரு அணியின் சிறப்பான விளையாட்டும் வெற்றியும் அந்த நிலையினை இல்லாமல் செய்தது. உலகக்கிண்ண தொடரில் ஐந்தாவது வெற்றியாக இந்த வெற்றி அவர்களுக்கு அமைந்து. நீண்ட இடைவேளைக்கு பின்னர் இவர்கள் விளையாடிமையினால் இவர்கள் பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஆனால் இவர்கள் தரப்பப்படுத்தல்களில் பதினோராமிடத்திலுள்ள அணி. எனவே இவர்கள் இன்னமும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும்.

அவுஸ்திரேலியா அணி 12 ஆமிட அணியான டென்மார்க் அணியினை சமன் செய்ததன் மூலம் பலமான அணியாக தங்களை வெளிக்காட்டினார்கள். முதல் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் கடுமையாக போராடினார்கள்.தங்கள் வீரர் ஒருவரின் காலில் பட்ட பந்து மூலமாகவே பிரான்ஸ் அணிக்கான இரண்டாவது கோல் வாய்ப்பினை வழங்கினார்கள். நல்ல அணியாக பலமான அணியாக தென்பட்ட அவர்களினால் டென்மார்க் அணியுடன் போட்டியினை சமன் செய்ய முடிந்தது. இவ்வாறு பலமாக விளையாடியவர்கள் பெரு அணியுடன் தோல்வியடைவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கவில்லை. இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பினை அவுஸ்திரேலியா அணி இழந்துவிட்டதாகவே கூற முடியும். தரப்படுத்தல்களில் 36ஆறாமிடத்திலுள்ள அணியொன்று இவ்வளவு சிறப்பாக விளையாடியுள்ளது என்பதுபோற்றப்படக் கூடிய விடயமே.

 

போட்டி முடிவுகள்

பிரான்ஸ்                                      Vs                           அவுஸ்திரேலியா                   2 - 1

பெரு                                                                  vs                            டென்மார்க்                                 0 - 1

டென்மார்க்                                 vs                            அவுஸ்திரேலியா                   1 - 1

பிரான்ஸ்                                       vs                            பெரு                                                  1 - 0

அவுஸ்திரேலியா                   vs                            பெரு                                                  0 - 2

டென்மார்க்                                 vs                            பிரான்ஸ்                                       0 - 0

 

 

புள்ளிப்பட்டியல்

1 பிரான்ஸ்                                    3              2              1              0              3              1              2              7

2 டென்மார்க்                              3              1              2              0              2              1              1              5

3 பெரு                                               3              1              0              2              2              2              0              3

4 அவுஸ்திரேலியா                3              0              1              2              2              5              -3            1

 

இரண்டாம் சுற்றுப் போட்டிகள்

ஜூன்  30 - 19: 30, ஆர்ஜன்டீனா எதிர்  பிரன்ஸ்

ஜூலை 01 - 21.30 ,  டென்மார்க் Vs குரேஷியா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X