2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான்-மே.தீவுகள் ஒ.நா.ச,போ தொடர் மீள்பார்வை

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி, தொடரை வெள்ளையடிப்புச் செய்து வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் அடங்கிய தொடரை முழுமையாக வெற்றி பெற்று, நீண்ட நாட்களுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி ஒரு தொடர் வெற்றியைப் பெற்று பெருமூச்சு விட்டிருக்கின்றது.

 குறிப்பாக அணியின் தலைவர் அஸார் அலி தொடரை கைப்பற்றி அணியின் தலைமை பொறுப்பை தக்க வைத்துள்ளதுடன், மூன்றாவது போட்டியில் சதமடித்து தன்னுடைய இடத்தையும் தக்க வைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஒன்பதாமிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியை முந்தி எட்டாமிடத்துக்கு உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் அணி, இந்தத் தொடர் வெற்றி மூலமாக இரண்டு புள்ளிகளைப் பெற்று 89 புள்ளிகளுடன் எட்டாமிடத்திலுள்ளது.   மேற்கிந்திய தீவுகள் அணி, நான்கு புள்ளிகளை இழந்து 88 புள்ளிகளுடன் ஒன்பதாமிடத்திலுள்ளது.

இந்தத் தரப்படுத்தல் முன்னேற்றம் காரணமாக 2019ஆம் ஆண்டு உலக கிண்ண தொடருக்கு நேரடியாக பாகிஸ்தான் அணி தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி, தகுதிகாண் போட்டிகளில் விளையாடியே தகுதி பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படவுள்ளது. தரப்படுத்தல்களில் முதல் எட்டு இடங்களை பெறும் அணிகளே நேரடியாக தகுதி பெறும்.

தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பாகிஸ்தான் அணிக்கு இந்த வெற்றியின் மூலம் அடுத்த கட்ட நகர்வுக்கு ஏற்ற அணியை தயார் செய்துள்ளது என ஓரளவு கூற முடியும். ஆனால் எதிர் கால போட்டிகளே அதற்கான சரியான முடிவை வழங்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, முக்கோண ஒரு நாள் தொடரில், தங்கள் நாட்டில், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளை எதிர்த்து விளையாடி, இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் அவர்களை பாகிஸ்தான் அணி வெற்றி கொண்டுள்ளது. துடுப்பாட்டம், பந்து வீச்சு என இரண்டுமே மிக பலமாக இந்த தொடரில் அமைந்தது, குறிப்பாக ஆரம்பம், சரியாக இந்த தொடரில் அமைந்தது. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில். முதல் மூன்று இடங்களே பிரச்சினையாக இருந்தது. இந்த தொடரில் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்துளளது. முதல் மூன்று வீரர்களினால் 4 சதங்கள் மிக அபாரமாக பெறப்பட்டுள்ளன. இவர்களில் முக்கியமாக பாபர் அஸாம் ஹட்-ரிக் சதமடித்து கலக்கியுள்ளார். 3 போட்டிகள் அடங்கிய தொடரில் கூடுதலான ஓட்டங்களை பெற்றவர் என்ற தென்னாபிரிக்கா வீரர் குயின்டன் டி கொக்கின் 342 ஓட்டங்கள் என்ற சாதனையை 360 ஓட்டங்களை பெற்று முறியடித்துளார்.   3 போட்டிகள் அடங்கிய தொடரில் மூன்று சதங்களை அடித்த இரண்டாவது வீரர் இவர் ஆவார். அத்துடன் ஒரு தொடரில் கூடிய சதங்களை அடித்தவர் வரிசையிலும் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் சதமடித்த வீரர்களில் எட்டாவது வீரராக தன்னைப் பதிவு செய்துள்ளார். இந்த அபார ஓட்ட குவிப்பு மூலமாக பாகிஸ்தான் அணியின் மூன்றாமிடம் நிரந்தரமாகியுள்ளது.

 

அடுத்தடுத்து  கூடுதல் சதங்களைப் பெற்றவர்கள் விபரம்

குமார் சங்கக்கார (இலங்கை ) , 4 சதங்கள் அவுஸ்திரேலியாவில் 2015 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரில் பெறப்பட்டவை.

105 *  பங்களாதேஷ்  மெல்பேர்ண் 26 பெப்ரவரி 2015 ,  # 3615

117 *  இங்கிலாந்து  வெலிங்டன் 1 மார்ச் 2015 , # 3619

104   அவுஸ்திரேலியா  சிட்னி 8 2015 , # 3629

124   ஸ்கொட்லாந்து  ஹோபார்ட் 11 மார்ச் 2015 , # 3632

 

ஸகீர் அப்பாஸ்(பாகிஸ்தான்)  3 சதங்கள் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் பெறப்பட்டவை.

118  முல்தான் 17 டிச 1982 , # 163

105  லாகூர் 31 டிசம்பர் 1982 , # 164

113  கராச்சி 21 ஜனவரி 1983 , # 172

 

சயீட் அன்வர் (பாகிஸ்தான்) 3 சதங்கள் ஷார்ஜா கிண்ணத்தில் பெறப்பட்டவை.

107  இலங்கை, ஷார்ஜா 30 ஒக்டோபர் 1993 , # 841

131  மேற்கிந்தியத் தீவுகள், ஷார்ஜா 1 நவம்பர் 1993 ஒருநாள் போட்டி # 842

111  இலங்கை,  ஷார்ஜா 2 நவம்பர் 1993 , # 843

 

ஹேர்ல்  கிப்ஸ் (தென்னாபிரிக்கா) 3 சதங்கள் -  மினி உலக க்கிண்ணம் என அழைக்கப்பட்ட சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் 2002 ஆம் ஆண்டு இலங்கையில் இரண்டு சதங்களும், தென்னாபிரிக்காவில்  வைத்து ஒரு சதமும் பெறப்பட்டது.

116   கென்யா, கொழும்பு (ஆர்பிஎஸ்) 20 செப் 2002 , # 1882

116  இந்தியா, கொழும்பு (ஆர்பிஎஸ்) 25 புரட்டாதி 2002 , # 1886

153  பங்களாதேஷ்  போச்செப்ஸ்ட்போர்ம் ,   3 அக்டோபர் 2002 , # 1890

 

ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)  3 சதங்கள் - இந்திய அணிக்கெதிராக இந்தியாவில் வைத்து 2 சதங்களும், மேற்கிந்திய தீவுகளில்  வைத்து ஒரு சதமும் பெறப்பப்பட்டது.  

114  இந்தியா குவாலியர் 24 பெப்ரவரி 2010 , # 2962

102 *  இந்தியா அகமதாபாத் 27 பெப்ரவரி 2010 , # 2963

102  மேற்கிந்தியத் தீவுகள்,  அன்டிகுவா, 22 மே 2010 , # 2979

 

குயின்டன்  டி கொக் (தென்னாபிரிக்கா) 3 சதங்கள்

135   இந்தியா ஜோகன்னஸ்பர்க் 5 டிசம்பர் 2013 , # 3442

106   இந்தியா டேர்பன் 8 டிசம்பர் 2013 , # 3443

101  தென்னாப்பிரிக்கா இந்தியா செஞ்சூரியன் 11 டிசம்பர் 2013 , # 3444

 

ரொஸ்  ரெய்லர் (நியூசிலாந்து) 3 சதங்கள் - இரண்டு சதங்கள் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்திலும், 1 சதம் டுபாயில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெறப்பட்டவை.

112   இந்தியா ஹமில்டன் 28 ஜனவரி 2014 , # 3465

102  இந்தியா வெலிங்டன் 31 ஜனவரி 2014 ,# 3467

105  பாகிஸ்தான் டுபாய்  8 டிசம்பர் 2014 , # 3564

 

பாபர் அஸாம் (பாகிஸ்தான்)  3 சதங்கள்

120  மேற்கிந்தியத் தீவுகள் ஷார்ஜா 30 செப் 2016 , # 3784

123  மேற்கிந்தியத் தீவுகள் ஷார்ஜா 2 ஒக் 2016 , # 3788

117  மேற்கிந்தியத் தீவுகள் அபுதாபி 5 ஒக் 2016 , # 3789

 

ஆரம்ப வீரர்கள் இன்னமும் கொஞ்சம் சிறப்பாக செயற்பட்டால் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் முழுமை பெறும். ஷர்ஜீல் கான் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியுள்ளார். பெரிய ஓட்ட எண்ணிக்கைகள் இல்லாத போதும் சராசரியான ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். அஸார் அலி, முதற் போட்டியில் ஓட்டமில்லாமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது போட்டியில் 9 ஓட்டங்கள். இவர் சரி வரமாட்டார் என்ற நிலையில் மூன்றாவது போட்டியில் 101 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து தன்னுடைய இடத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

 

நான்காமிடத்தில், சொஹைப் மலிக், இரண்டாவது போட்டியில் 90 ஓட்டங்களைப் பெற்றார். மற்றைய இரண்டு போட்டிகளிலும் குறைந்த ஓட்டங்கள். ஷப்ராஸ் அஹமட் தனது துடுப்பாட்டத்தை வழமை போன்றே சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். மொஹமட் ரிஸ்வான் சரியாக சோபிக்கவிலை. உமர் அக்மல் அந்த இடத்தில துடுப்பாடக் கூடியவர். குழுவில் இருந்த போதும் வாய்ப்பு கிடைக்கவிலை. அடுத்த தொடர் இவருக்கு கேள்விக்குறியே.

 

இமாட் வஸீமுக்கு இந்த தொடரில் பெரியளவில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதி நேரத்தில்தான் துடிப்பாடினார். ஓட்டங்களும் பெரியளவில் அவரால் பெற முடியவில்லை. ஆனால் கடந்த தொடரில் இவரின் துடுப்பாட்டம் கைகொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பந்துவீச்சில் சுழற் பந்து வீச்சாளர் மொஹமட் நவாஸ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி தனக்கான இடத்தை நிலையாகப் பெற்றுள்ளார். கடந்த தொடர்களில் இவரின் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. இமாட் வசீம் மூன்று போட்டிகளிலும் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார். இவரின் பந்து வீச்சு கடந்த தொடர்களில் சிறப்பாகவே அமைந்திருந்தது. பாகிஸ்தான் அணியின் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும் இடதுகர பந்து வீச்சாளர்கள். எதிர்காலத்தில் இது சரியாக அமையுமா என்பது மட்டுமே கேள்வியாகவுளள்து.

 

ஹஸன் அலி, முதற் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சார்பாக இவர் சிறப்பாக    பந்துவீசியிருந்தார். மொஹமட் ஆமீர் முதலிரு போட்டிகளிலும் 2 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியிருந்த நிலையில், தாயின் சுகவீனம் காரணமாக நாடு திரும்பிருந்தார். இவரின் பந்து வீச்சு எதிர்காலத்தில் என்னவாகும்? கடந்த தொடர்களிலும் இவரின் பந்து வீச்சு சிறப்பாக அமையவிலை. ஆமீர் மீண்டும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த 9 போட்டிகளில் 12 விக்கெட்டுகளையே கைப்பற்றியுளார். இது இவரின் இடத்தை கேள்வியாக்கியுள்ளது. ஆனாலும் இவரின் பந்து வீச்சு நம்பிக்கையுண்டு. அணியில் தொடர்வார் என நம்பலாம். றியாஸ் 3 போட்டிகளிலும் 5 விக்கெட்களை கைப்பற்றி அணியில் இனி இடம்பிடிப்பார் என நம்பலாம்.

 

இந்தத் தொடரில், பாகிஸ்தான் அணியில் அதிக மாற்றங்கள் இடம்பெறவில்லை. நிலையான அணியாக சமநிலை அணியாக விளையாடியுள்ளனர். முக்கிய அணிகளுடனும் இவர்கள் இவ்வாறே விளையாடினாள் சிறப்பான அணியாக மீண்டும் வர முடியும். பந்து வீச்சில் இன்னமும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பந்து வீச்சை செம்மை செய்தால் அணி முழுமை பெற்று விடும். இந்த தொடர் தந்த எல்லாவற்றையும் சரியாக கணிப்பிட அடுத்த இங்கிலாந்து தொடர் வரை காத்திருக்க வேண்டும்.

 

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஓரளவு சிறப்பான நிலைக்கு வர ஆரம்பிக்கிறது என எதிர்பார்த்திருக்க மீண்டும் "பழைய குருடி கதவ திறவடி" கதையாக மாறிப்போயுள்ளளது. இவர்களை என்ன சொல்வது? ஏன் இப்படி? சில நம்பிக்கை தரும் வீரர்கள் அணிக்குள் வந்தார்கள். இவர்கள் ஏதாவது செய்து காட்டுவார்கள் என நம்பியிருந்தால் அவர்களும் அதே நிலைதான். பழையவர்களும் முன்னேற்றமின்றி போராட்டமின்றி ஏதோ விளையாடுகின்றோம் என்பது போல விளையாடி வருகின்றனர். துடுப்பாட்டம் , பந்து வீச்சு என இரு பக்கமும் மிக மோசமாக அமைந்துள்ளது.

 

மார்லன் சாமுவேல்ஸ், 116 ஓட்டங்கள் 3 போட்டிகளிலும். டரன் பிராவோ 90 ஓட்டங்கள். அறிமுக பந்து வீச்சாளர் 19 வயதான அல்சாரி ஜோசெப் நம்பிக்கை தரும் விதமாக அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார். 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தியா அணியுடனான 20-20 போட்டிகளில் சதமடித்த எவின் லூயிஸ் இந்த தொடரில் அறிமுகத்தை மேற்கொள்வார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மூன்றாவது போட்டியிலேயே அறிமுகம் வழங்கப்பட்டது. 22 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஜோன்சன் சார்ள்ஸ் இனை அதிகம் நம்பியிருந்தனர். ஆனால் அவர் கைகொடுக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிரைக் ப்ராத்வைட் 14, 39, 32 என்ற ஓட்டங்களையே பெற்றுக்கொண்டார். ஆக  இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி எந்த பலனையும் பெறவில்லை என மட்டுமே கூற முடியும்.

 

பாபர் அஸாம்                  3              3              360         123         120.00   99.17                     3              0

ஷப்ராஸ் அஹமட்           3              3              119         60*         119.00   101.70                   0              0

மார்லன் சாமுவேல்ஸ்      3              3              116         57           38.66     90.62                     0              1             

ஷர்ஜீல் கான்                   3              3              116         54           38.66     120.83                   0              1

அஸார் அலி                     3              3              110         101         36.66     85.93                     1              0             

சொஹைப் மலிக்               3              3              101         90           33.66     99.01                     0              1             

(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதங்கள், அரைச்சதங்கள்)

 

 

கூடிய விக்கெட்களை இந்த தொடரில் கைப்பற்றியவர்கள்

 

மொகமட் நவாஸ்                          3              3              26.0        0              121         7              4/42       17.28     4.65       

வஹாப் றியாஸ்                            3              3              24.0        0              103         5              2/28       20.60     4.29

அல்சாரி ஜோசெப்                        2              2              18.0        0              124         4              2/62       31.00     6.88       

ஜேசன் ஹோல்டர்                       3              3              25.0        1              149         4              2/51       37.25     5.96       

ஹஸன் அலி                               3              3              20.4        1              83           3              3/14       27.66     4.01       

கார்லோஸ் ப்ராத்வைட்                2              2              18.0        0              114         3              3/54       38.00     6.33       

இமாட் வசீம்                                 3              3              26.0        0              127         3              1/29       42.33     4.88       

சுனில் நரையன்                              3              3              28.0        0              144         3              1/39       48.00     5.14       

(போட்டிகள், இன்னிங்ஸ், ஓவர்கள், ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்து வீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .