2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘இயல்பு வாழ்க்கை திரும்ப பிரார்த்திப்போம்’

Editorial   / 2020 நவம்பர் 13 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த தீபாவளி திருநாளில், அனைவரின் இயல்பு வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்வோம் என இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ வை.க வைத்தீஸ்வர குருக்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தீபாவளி திருநாள் எங்கும் விமர்சையாக கொண்டாடும் ஒரு பண்டிகை ஆகும். ஒவ்வொரு இல்லத்திலும் இந்நாளில் புத்தாடை உடுத்து, ஆலயங்களுக்கு சென்று ,இறைவனை வழிபட்டு ,உறவினர் வீடுகளுக்கு பலகாரங்களை பகிர்ந்து உண்டு மகிளும் நாளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த வருடம் ஒட்டுமொத்த உலகமும் கொடிய நோய் தொற்றில் சிக்கியுள்ளது. சகலரும் பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம். வேலையில்லாத் திண்டாட்டம், வருமானம் இல்லை,நோய்ப்பதற்றம் ஆகியவற்றால் இந்த வருடம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பட்டாசு வெடிப்பதிலோ அல்லது, பண்டிகையின்போது புதுத்துணி உடுத்தி மகிழ்வதோ தவிர்த்து இந்தவேளையில் நாம் இருப்பதனை கொண்டு வாழப்பழகுவோம் என்றும் தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இயன்ற வரை சுகாதாரதுறைசார் நடைமுறைகளை கடைப்பிடிப்போம். மேலும், எம்மையும், நாட்டையும் பாதுகாப்போம். வீட்டிலே இருந்து இறைவனை மெய்யுருக கூட்டாக உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யலாம் இது எவ்வளவு மேன்மையான எண்ணம் எனத் தெரிவித்துள்ளார்.

அதனைப்போல், மகிழ்வான இரவு பொழுதில் வீட்டில் மனம் விட்டு கதைபேசி வாய்விட்டுச் சிரித்துபாருங்கள் உங்கள் நோய்க்கூட விட்டு போகும். நிறைவாக புற இருள் அகல தீப ஒளி ஏற்றுகிறோம், அக இருளை போக்க நேரிய சிந்தனை, நற்செயல், இறைவழிபாடு இவை அனைத்தும் அக இருளை போக்கி உள்ளத்தை மலர்ச்சியாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

எனவே, அனைத்து உலக மக்களின் இயல்பு வாழ்வு சுபீட்சம் வேண்டி அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனைச் செய்து நிறைவான நல்வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம் என தீபாவளி நழ்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .