2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மகா யாகம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், இறந்த ஆத்மாக்களின் ஆன்ம ஈடேற்றம் மற்றும் உலக நன்மை கருதி, நேற்று வியாழக்கிழமை (17) காலை, ஆரம்பமான மகா யாகம், இன்று வெள்ளிக்கிழமை (18) மாலையுடன், நிறைவுப்பெறவுள்ளது.

இந்தியாவின் கொல்லிமலைக் காட்டுப் பகுதியிலிருந்து எடுத்துவரப்பட்ட, கிடைத்தற்கரிய மிகவும் பெறுமதிவாய்ந்த 10008 மூலிகை வகைகளைக்கொண்டு, இந்த மகா யாகம் இடம்பெறுகின்றது.

இந்தியாவிலிருந்து வருகைத்தந்துள்ள காகபுசுண்ட தர்மலிங்க சுவாமிகள் தலைமையிலான சிவாச்சாரியார் குழுவினர், இந்த யாகத்தை நடத்தி வருகின்றனர்.  இந்த யாகத்தில், பல பாகங்களிலிருந்து வருகைத்தந்துள்ள பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த யாகம், இலங்கையில் முதன் முறையாக நடத்தப்படும் மகா யாகம் என கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வ.சோதிலிங்கக் குருக்கள் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .