2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கோளாவில் கண்ணகியம்மன் மகா கும்பாபிஷேகம்

Princiya Dixci   / 2017 மே 02 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்டயாக  மகா கும்பாபிஷேகம், கடந்த 30ஆம் திகதி நடைபெற்றது.

மூர்த்தி, தலம், விருட்சம், தீர்த்தம் எனும் நான்கு சிறப்புக்களையும் கொண்டு விளங்கும் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வெளி வீதி வளாகத்தில் அமர்ந்து தன்னை நாடிவரும் அடியார்க்கு இஷ்ட சித்திகளை அருள்பாலிக்கும் அனவரத நாயகி சிலம்புச் செல்வி ஸ்ரீகண்ணகி அம்மனின் கும்பாபிசேகத்துக்கான கிரியாகால ஆரம்பம் கடந்த (28) ஆரம்பமானது

தொடர்ந்து (29) காலை 8 மணிமுதல் மாலை 5மணிவரை நடைபெற்ற எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வோடும் 30ஆம் திகதி காலை 9 மணி 8 நிமிடம் முதல் 10 மணி 59 நிமிடம் வரையுள்ள சுபமுகூர்த்தத்தில் மகா கும்பாபிசே குடமுழுக்கும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

நடைபெற்ற ஏககுண்டயாக பூஜையினை தொடர்ந்து கலசத்திற்கான கும்பம் சொரியும் பக்தி பூர்வமான நிகழ்வு பெருந்திரளான பக்தர்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் நடைபெற்றது.

பின்னர் பிரதான கும்ப வெளி வீதி உலா நடைபெற்று அம்மனுக்கான கும்பம் சொரியப்பட்டதுடன,; பூஜைகளும் நடைபெற்றது.

கும்பாபிசேகத்தினை தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிசேக பூசைகள் நடைபெற்று வருவதுடன்; மே மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸ்டோத்தர சகஸ்ர 1008 சங்காபிசேத்துடன் மண்டல பூஜைகளும் கும்பாபிசேக கிரியைகளும் நிறைவுறும்.

ஆலய தலைவர் கே.கமலமோகனதாசன் தலைமையில் நடைபெறும் கிரியைகள் யாவற்றையும் சிவாகம கிரியாஜோதி சிவஸ்ரீ க.கு சீதாராம் குருக்களின் தலைமையில் சிவஸ்ரீ கௌரி சங்கர் சர்மா குருக்கள் உள்ளிட்ட குருமார்கள் நடத்தி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .