2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சங்காபிஷேகம்…

Editorial   / 2021 ஏப்ரல் 24 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

தலவாக்கலை அருள்மிக ஸ்ரீ கதிரேசன் தேவஸ்த்தான 3ஆம் வருட சங்காபிசேக விஞ்ஞாபனனம் மிக சிறப்பாக நடைபெற்றது.

தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் தேவஸ்த்தானத்தின் மூன்றாம் வருட 108 சங்காபிசேக விஞ்ஞாபனம் சுகாதார வழிமுறைகளுக்கமைய மிக சிறப்பாக நடைபெற்றது.

பிலவு வருடம் சித்திரை மாதம் 11ஆம் நாள் 24ஆம் திகதி காலை 8.05 முதல் 12.30 மணிவரை வரும் துவாதசி சுக்லபக்ஷ வளர்பிறை திதியும்.உத்தர நட்சத்திரமும் சித்தமிர்த யோகமும் ரிசப லக்னம் கூடிய சுபநாளில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கதிரேசன் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் 108  நாம சங்காபிசேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அதனை தொடர்ந்து விசேட அலங்கார பூஜை,வசந்த  மண்டப  பூஜை,யாக பூஜை ஆகியன இடம் பெற்று  ஸ்ரீ விநாயகர் பெருமான்,வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கதிரேசன் பெருமான், ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆகிய மூர்த்திகள்,தேவஸ்த்தான உள்வீதி வலம்வருதல் இடம்பெற்றன.

இதன் போது உலகம் மற்றும் நாட்டு மக்கள் பீடிக்கப்பட்டுள்ள கொரோனாதொற்றிலிருந்து விடுபட விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது.

சமய கிரியைகள் புத்தசாசன மத விவகார அமைச்சின் இந்து சமய விவகார இணைப்பாளரும்,சர்வமத இந்து பீட செயலாளருமான சிவாகம ஞானவாரி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேவஸ்தான குருக்கள் லங்கா தேசமானி முத்துசாமி ஐயர் பிரசாந்த சர்மா, ஆலய தேசிகர் ம.விஜயகாந்த் தேசிகர் ஆகியவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றன.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட  எண்ணிக்கையிலான பக்த அடியார்களே கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X