2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை

Editorial   / 2017 செப்டெம்பர் 02 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

ஆயித்தியமலை தூய சதாசகாய மாதா திருத்தலத்தின் 63ஆவது வருடாந்த திருவிழா கூட்டுத்திருப்பலியை முன்னிட்டு, பாதயாத்திரை, இன்று சனிக்கிழமை (02) மட்டக்களப்பில் ஆரம்பமானது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்ட வருடாந்த பாதயாத்திரை, மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயம் மற்றும் செங்கலடி புனித நிக்ளஸ் தேவாலயத்திலிருந்து காலை 6 மணிக்கு ஆரம்பமாகின.

புனித மரியாளைச் சுமந்த வாகன ஊர்தி சகிதம பேராலயத்திலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  வீதிவழியாக ஜெபித்தவண்ணம் சென்றது.

வருடாந்த திருவிழா கூட்டுத்திருப்பலியை, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா, நாளை ஞாயிற்றுக்கிழமை ஒப்புக் கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X