2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மஹா கும்பாபிஷேக பெருவிழா

Editorial   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாநகரில் பல்லாண்டு காலமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் (பெரிய கோவில்) ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா, எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஆலய பிரதம குரு சிவதத்துவ கிரியா ஜோதி சிவஸ்ரீ ஜெ. பாலகிருஷ்ணன் குருக்களின் நெறிப்படுத்தலில் புளியந்தீவு ஸ்ரீ நாகேஷ்வரர் ஆலய பரம்பரை குரு சிவாகம கிரியா வித்தகர், சிவாகம கியாரத்தினம் ''சௌம்யானுஸ்டாசார்ய'' சிவஸ்ரீ ந. தாமோதரக் குருக்களின் தலைமையில் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்தக் கும்பாபிஷேக நிகழ்வுகளில் சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன் சிவஸ்ரீ தியாக கெங்காதரக் குருக்கள், கொழும்பு பிரம்மஸ்ரீ வி. ரவிசங்கரசர்மா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு கிரியாரம்பத்துடன், விசேட பூஜைகளும் வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.

அத்துடன், நவம்பர் மாதம் 2ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்களால் அம்மனுக்கு எண்ணைக்காப்பு சாத்துதல் இடம்பெறும்.

அதனையடுத்து, நவர்பர் மாதம்  3ஆம் திகதி  விசேட பூஜைகள், வழிபாடுகளைத்  தொடர்ந்து காலை 8 மணி முதல் 9 மணி வரையுள்ள சுபமு௯ர்த்தத்தில் மஹா கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெறுவதுடன், மாலை 5 மணிக்கு சுவாமி உள் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

கும்பாபிஷேக நிகழ்வுகளைத் தொடர்ந்து 48 நாட்களாக மண்டலாபிஷேகம் நடைபெறுவதுடன், 48 நாட்களுக்கும் பகல் அன்னதாமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .