2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மில்லகந்த முத்துமாரியம்மன் ஆலய திருவிழா

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

புளத்சிங்கள - மில்லகந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆடித்தேர் பெருவிழா, நாளை (02) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதைமுன்னிட்டு, நாளை அதிகாலை 5 மணிக்கு புண்ணியாக வாசனம், மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மங்கள கொடியேற்றம் அதனை தொடர்ந்து அலங்கார பூஜை சுவாமி உள்வீதி வலம் வருதல் என்பன இடம்பெறும்.

நாளை மறுதினம் (03)  காலை கும்பம்யாக சாலை பிரவேசம், கும்பபூஜை, 1009 நவோத்திர சகஸ்ரசங்காபிஷேகம், அலங்கார பூஜை சுவாமி உள்வீதி வலம் வருதல், அன்னதானம் என்பன இடம்பெறும்.

4ஆம் திகதி, திருவிளக்கு பூஜை, சத்துரு சம்ஹார ஹோமம், அலங்கார பூஜை, வேட்டைத் திருவிழா என்பன இடம்பெறும்.

5ஆம் திகதி  காலை 8.30 மணிக்கு, புலத்சிங்கள வெள்ளமுனியன் ஆலயத்திலிருந்து பால்குட பவனி ஆரம்பமாகி, புலத்சிங்கள நகர் வழியாக ஆலயம் வந்தடையும். மாலை தேர் பவனி இடம்பெறும்.

6ஆம் திகதி பகல் 12.30 மணிக்கு அன்னதானமும் மாலை பிரயாசித்த அபிஷேகம், மாவிளக்கு பூஜை என்பனவும் இடம்பெறும்.

7ஆம் திகதி  பகல் 12.30 மணிக்கு தீர்த்தோற்சவமும்  இரவு பூங்காவனமும் திருவூஞ்சல் திருவிழாவும் நடைபெறும். 8ஆம் திகதி வைரவர் பொங்கல் பூஜையும் வைரவர் மடையும் நடைபெற்று விழா நிறைவு பெறும்.

மேற்படி ஆலயத்தின் பூஜைகள் அனைத்தும், ஆலய பிரதம குரு கிரியா ஆகம வித்தகர், கிரியா பாஸ்கரர் விஷ்வ பிரம்மஸ்ரீ ந.சந்திரலால் குருக்கள் தலைமையில் பல குருக்கள்மார்களின் ஒத்துழைப்புடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .