2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’என்னடி முனியம்மா?’

Editorial   / 2018 பெப்ரவரி 09 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்ணம்மா: அப்பாடா, இனிதான் அக்கா நிம்மதி. ஒரு மாதிரியா எல்லாம் முடிஞ்சிருச்சி.

முனியம்மா: என்னாப்புள்ள ஒரு மாசமா ஆளையே காணோம். இப்படி பேயடிச்ச மாதிரி, வந்திருக்க.

கண்ணம்மா: எலக்ஸன் மீட்டிங்குக்கு போயிருந்தேன் அக்கா. ஒங்கல தேடுனேன். ஆளையே காணோம்.

முனியம்மா: என்னமோ, வேட்பாளர் மாதிரி, சொல்லுற. நம்பள தொந்தரவு பண்ணுவாங்கனுதான், வீட்ட பூட்டிக்கிட்டு, வீட்டுக்குள்ளேயே நான் இருந்துட்டேன்.

கண்ணம்மா: இல்லக்கா, மீட்டிங்குக்கு போனால்தானே, யார், யார், என்னா, என்னா செய்து இருக்காங்க, என்னா? என்னா? செய்யப்போறாங்கனு தெரியும்.

இல்லாட்டி கண்ண மூடிக்கிட்டு, புள்ளடி அடிச்சிட்டா, வெற்றிப்பெற்றவர்கள், இந்த பக்கமே இன்னும் 5 வருசத்துக்கு தல வைச்சு பார்க்கவே மாட்டாங்க.

முனியம்மா: நீ, கொஞ்சம் வெவரமான ஆள்தான் புள்ள. ஒகே, ஒகே. எது எப்படியோ, ஓட்டு போடுறது நம்முடைய உரிமை. அத கட்டாயம் செய்யனும். காலையிலேயே போட்டுடமுனுனா, பிரச்சினை இல்ல.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .