2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நாட்டு வைத்தியரைப் பாதுகாத்தல்

Menaka Mookandi   / 2018 ஜூலை 21 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்நாட்களில், காக்கிச்சட்டைத் திணைக்களத்தின் செயற்பாடுகள், முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவாம்.

ஒருவரது ​சேவைக்காலம் முடியும் போது, அந்தச் சேவைக்காலத்தை நீடித்துக்கொள்வதாயின், சேவைக்காலம் முடியும் நாளிலிருந்து, நீடிப்பு வழங்கப்படுவதே, சாதாரண நடைமுறையாகும்.

ஆனால் இந்தத் திணைக்களத்தில், மிகவும் வித்தியாசமான முறையில், சேவைக்கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாம். சேவைக்காலத்தை நீடிக்க வேண்டுமாயின், ஒரு மாதமேனும், ஓய்வு பெற்றுவிட்டு வருமாறு, முன்னாள் ரவி ஐயாவுக்கு, அரசாங்கம் பணித்திருந்ததாம்.

இந்தப் புதினமான ஓய்வு தொடர்பில் தேடிப்பார்த்த போது, காக்கிச்சட்டைத் திணைக்களத்திலுள்ள பிரசித்த நாட்டு வைத்தியருக்கு பதவியுயர்வு வழங்குவதற்காகத் தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

மத்திய மலைநாட்டைச் சேர்ந்த பொலிஸ் உயரதிகாரி ஒருவர், சிறந்த நாட்டு வைத்தியராகவும் விலங்குகிறார். இவர், இன்னும் ஒரு மாதத்தில், ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளாராம். அதற்கு முன்னர், அவருக்குப் பதவியுயர்வு வழங்குமாறு, மத்தியிலுள்ள பெரிய விகாரையொன்றிலிருந்து, அரசாங்கத்திடம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாத பட்சத்தில், அதனால், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு, உரிய நேரத்தில் ஓய்வைப் பெற்றுக்கொடுத்துவிட்டு, பொலிஸ் நாட்டு வைத்தியருக்கு, பு​ரமோஷன் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

அதன் பின்னர், நாட்டு வைத்தியர் வீட்டுக்குப் போய்விடுவாராம். அதற்குப் பிறகு தான், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர், மீண்டும் சேவை நீடிப்போடு, பதவிக்கு வருவாராம். இது தான் இந்தப் பிரச்சினை. விளங்கியதோ...?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X