2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மேசை சண்டையில் இழந்த துண்டுவடை

Editorial   / 2021 மே 03 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிடைத்த கதிரையை காப்பாற்றிக்கொள்வதற்கு பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தே ஆகவேண்டும்.

நமது நாட்டை பொறுத்தவரையில், ஜனாதிபதியின் சிம்மாசனமே அதியுர்ந்த ஆசனமாகும். அதற்கடுத்து, பிரதமர் ஆசனம், சபாநாயகரின் ஆசனம், பிரதம நீதியரசரின் ஆசனம் இப்படி பட்டியல் நீண்டுக்கொடே செல்லும்.

அதிகாரம் கையிலிருந்தால் ஆசனத்தை காப்பாற்றுவது இலகுவானது, கை மீறி போய்விட்டாலோ, அசட்டையாக இருந்தாலே, இடைநடுவிலேயே ஆசனத்திலிருந்து இறக்கிவிட்டுவிடுவர். அரசியல் ஆசனங்களை தக்கவைத்து கொள்வதற்கு “அரசியல் இராஜதந்திரம்” முக்கியம்.

ஆசனத்தை விடவும் மேசையை தக்க வைத்துகொள்வதற்கான உரிமை சண்டையை நினைக்கும் போது, வயிற்றை காப்பாற்றுவதற்காக ஒவ்வொருவரும் எவ்வளவு பிரயத்தனம் செய்கின்றார்கள் என்பது தெரிந்தது. அந்த இராஜதந்திரத்தை அவரவரிடமே கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.

அப்படிதான், கொழும்பிலிருக்கும் பிரபல சைவ கடையில், அன்று சாப்பிட்டு கொண்டிருந்தேன், அக்கடையில் “ஈ” ஓட்டுவதை காணவே முடியாது. அந்தளவுக்கு நுகர்வோர் நிறைந்திருப்பர்.

வாடிக்கையாளர்கள் வருகைதராவிடினும், வெளியிலிருந்து எட்டிப்பார்த்தால், வாடிக்கையாளர் நிரம்பி இருப்பதைப்போல தலைகள் தெரியும். அப்​படியென்றால், வெயிட்டர்களும், ஏனையோரும் குவிந்திருப்பர்.  

​ஏனைய சாப்பாட்டு கடைகளை போலவே, ஒரு மேசைக்கு நான்கு கதிரைகள் போடப்பட்டிருக்கும், இரண்டு மேசைகளை ஒரு வெயிட்டர் பார்க்கவேண்டும். சாப்பிடுவோர் கொடுக்கும் “திருப்தி பணமே” வெயிட்டர்களுக்கு பெரும் சம்பளமாகும். ஆகையால், மேசைகளை பலவற்றுக்கு ஒரே நேரத்தில் சேவைகளை வழங்குவர்.

கொரோனாவின் மூன்றாவது அலையின் பின்னர், ஒருமேசைக்கு மூன்று கதிரைகளே போடப்பட்டன. வெயிட்டர் ஒருவருக்கு, ஒரு மேசையே வழங்கப்பட்டது. அதுவும், ஒவ்வொருநாளும், வரிசைகளும் மாற்றப்பட்டன.

“ச்சி எனக்கு ஏழாது, நான், நேற்றும் ஒருமேசைதான் பார்த்தேன், இன்றைக்கு இரண்டு மேசைகளை பார்ப்பேன்” என பெண் வெயிட்டர் கூச்சலிட்டார்.

பொதிகள் கட்டுமிடத்திலிருந்த அண்ணை பார்த்து, அண்ணே, எனக்கு மேலதிகமாக ஒரு மேசையை தாருங்க, வெயிட்டர்களும் குறைவுதானே! என மற்றுமொரு பெண் வெயிட்டர் கேட்டுக்கொண்டார்.

தலையை சொறிந்துகொண்டு வந்த அண்ணன், சாப்பாடு கட்டுவதற்காக வைத்திருந்த மேசையை இழுத்துபோட்டு கதிரைகளை அடுக்கினார்.

அப்போதுதான், ஏதோவொரு பிரச்சினையை தீர்த்துவைத்துவிட்டு வந்த அந்த ஹோட்டலின் மெனஜர், மேசை இழுத்துப் போடுவதைப் பார்த்து கடுப்பாகிவிட்டார்.

மேசைகளையும் கதிரைகளின் எண்ணிக்கையும் குறைக்குமாறு சொல்லியுள்ளனர். நீங்கள் இழுத்துப் போடுகின்றீர்கள், அப்படிபோடவேண்டாம். இழுத்துப்போடு, இழுத்துப்போடு என சத்தமிட்டார். பழையப்படி கதிரைகள், ஒன்றின் மேல் ஒன்றாக குப்புற கவிழ்ந்தன. மேசை பழைய இடத்துச் சென்றது.

மேசையை கொடுத்தால் மேசையை பார்க்கவேண்டியதுதானே, என இரண்டு மேசைகளை பார்த்துகொண்டிருந்த பெண் வெயிட்டர் கூற, நானும் இந்த சம்பாஷாணைகளை வேடிக்கைப்பார்த்து கொண்டிருந்தேன்.

எனக்கு சாப்பாடு பறிமாறியவர் ஆண் வெயிட்டார். எந்தவிதமான கேள்விகளும் கேட்காது, எனது தட்டை தூக்கிச் சென்று கொட்டிவிட்டார்.

அந்த நேரத்துக்கு சமாதானமான பெண் வெயிட்டர்கள் இருவரும், அப்புறம் என்னடி, நீ, கொஞ்சநேரம் இரண்டு மேசைகளை பாரு, நான் கொஞ்சநேரம் ​பார்க்கிறேன் என சமாதானம் செய்துகொண்டர்.

சம்பாஷணையில் மூழ்க்கியிருந்த எனக்கு தட்டிலிருந்த  வடைத்துண்டை இழந்தது மட்டும்தான் மிச்சம். பிறகென்ன, கைகளை கழுவிவிட்டு  பில்லையும் கட்டிவிட்டு, அலுவலகத்துக்கு புறப்பட்டுவிட்டேன்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .