2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜனவரி 17

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1915 : முதலாம் உலகப் போர் - ரஷ்யா உதுமானியத் துருக்கியை சரிக்காமிஸ் போரில் வென்றது.

1917 : கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா கூ25 மில்லியனை டென்மார்க்குக்குக் கொடுத்தது.

1928 : லியோன் ட்ரொட்ஸ்கி மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.

1944 : இரண்டாம் உலகப் போர் - நேசநாட்டுப் படைகள் குளிர்காலக் கோட்டை ஊடறுத்து உரோமைக் கைப்பற்ற மோண்டி கசீனோ மீது முதலாவது தாக்குதலை மேற்கொண்டது. இச்சண்டைகளில் 105,000 நேசப் படையினர் கொல்லப்பட்டனர்.

1945 : இரண்டாம் உலகப் போர் - சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரை நாட்சிகளிடம் இருந்து கைப்பற்றின.

1945 : சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாட்சிகள் வெளியேற ஆரம்பித்தனர்.

1946 : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை முதலாவது கூட்டத்தை நடத்தியது.

1948 : நெதர்லாந்துக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1951: சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.

1961 : கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பத்திரிசு லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

1981 : பிலிப்பீன்சில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் இருந்த இராணுவச் சட்டத்தை அரசுத்தலைவர் பேர்டினண்ட் மார்க்கோஸ் நீக்கினார்.

1991 : நோர்வே மன்னர் ஐந்தாம் ஓலவ் இறந்ததை அடுத்து அவரது மகன் ஐந்தாம் அரால்டு மன்னராக முடிசூடினார்.

1991 : வளைகுடாப் போர் ஆரம்பித்தது.

1992 : இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்தியமைக்காக ஜப்பானியப் பிரதமர் கீச்சி மியாசாவா தென் கொரியாவில் வைத்து மன்னிப்புக் கேட்டார்.

1994 : லாஸ் ஏஞ்சல்ஸில் 6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 57 பேர் உயிரிழந்தனர்.

1995 : ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் உயிரிழந்தனர்.

1998 : ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.

2007 : வட கொரியா அணுவாயுதச் சோதனை நடத்தியதை அடுத்து ஊழிநாள் கடிகாரம் நள்ளிரவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக மாற்றப்பட்டது.

2010 : நைஜீரியாவில் முஸ்லிம், கிறித்தவக் குழுக்களிடையே கலவரம் வெடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.

1964 : மிசெல் ஒபாமா, அமெரிக்க சட்டவறிஞர், செயற்பாட்டாளர், அமெரிக்காவின் 46ஆவது முதல்பெண்மணி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X