2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 19

S. Shivany   / 2021 ஜனவரி 19 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

1511 – இத்தாலியின் மிரண்டோலா கோட்டையை பிரான்சியப் படைகள் கைப்பற்றின.

1661 – பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார்.

1764 – உலகின் முதலாவது அஞ்சல் குண்டுவெடிப்பு டென்மார்க் இராணுவத் தலைவர் போல்சனைப் படுகாயப்படுத்தியது.

1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை வந்தடைந்தது.

1795 – நெதர்லாந்தில் பத்தாவியக் குடியரசு அறிவிக்கப்பட்டதை அடுத்து இடச்சுக் குடியரசு முடிவுக்கு வந்தது.

1806 – நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது.

1817 – சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து ஆன்டெசைக் கடந்தது.

1818 – பிரெஞ்சு இயற்பியலாளர் அகஸ்டின் பிரெனெல் முனைவுற்ற ஒளியைப் பற்றிய விளக்கத்தை அறிவித்தார்.

1839 – பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடன் நகரைக் கைப்பற்றியது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவிலிருந்து பிரிந்த ஜோர்ஜியா தென் கரொலைனா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்தது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மில் ஸ்பிரிங்ஸ் சண்டையில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தனது முதல் பெரிய தோல்வியை சந்தித்தது.

1867 – பிரித்தானிய இலங்கையில் பால்க்னர் என்பவரைக் கொன்ற குற்றத்திற்காக கல்யாண் கங்காணி என்பவர் தூக்கிலிடப்பட்டார்.

1871 – பாரிசு முற்றுகையின் போது, புருசியா புனித குவென்டின் சமரை வென்றது.

1883 – முதலாவது மேலே செல்லும் கம்பி வலையமைப்புபைக் கொண்ட மின்னொளி அமைப்பு எடிசனால் நியூ செர்சியில் அமைக்கப்பட்டது.

1899 – ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.

1903 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.

1917 – இலண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர்.

1920 – அமெரிக்க மேலவை உலக நாடுகள் சங்கத்தில் சேருவதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது.

1927 – பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.

1937 – அவார்டு இயூசு லாஸ் ஏஞ்ஜல்ஸ் இல் இலிருந்து நியூ யார்க் நகரத்திற்கு 7 மணிநேரம், 28 நிமிடங்கள், 25 நொடிகளில் பறந்து சாதனைப் புரிந்தார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கின.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டன.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்துல் நாட்சிகளின் லோட்சு வதைமுகாமில் இருந்து யூதக் கைதிகளை விடுவித்தன.

1946 – ஜப்பானியப் போர்க்குற்றவாளிகளை விசாரிப்பதற்கென டக்ளசு மக்கார்த்தர் தோக்கியோவில் தூரகிழக்கிற்கான பன்னாட்டு இராணுவ நீதிமன்றத்தை அமைத்தார்.

1966 – இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1981 – ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1983 – ஆப்பிள் நிறுவனத்தின் வரைகலை பயனர் இடைமுகம் மற்றும் சுட்டியுடனான முதலாவது வணிக-முறை தனி மேசைக் கணினி ஆப்பிள் லீசா' வெளியிடப்பட்டது.

1983 – நாட்சி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைதுசெய்யப்பட்டார்.

1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் பரவத் தொடங்கியது.

1991 – வளைகுடாப் போர்: ஈராக்கு இரண்டாவது ஸ்கட் ஏவுகணையை இசுரேல் மீது ஏவியது. 15 பேர் காயமடைந்தனர்.

1993 – செக் குடியரசு, சிலோவாக்கியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தன.

1993 – வேதி ஆயுத உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது.

1993 – ஐபிஎம் நிறுவனம் 1992 ஆண்டிற்கான அறிக்கையில் கூ4.97 பில்லியன் நட்டத்தை அறிவித்தது, இன்றுவரையில் அமெரிக்காவில் வேறொரு நிறுவனம் இந்த அளவில் நட்டம் அடைந்ததில்லை.

1997 – 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் எபிரோன் திரும்பினார்.

2006 – சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் அங்கேரியில் வீழ்ந்து நொறுங்கியது.

2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.

2007 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .