2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : டிசம்பர் 24

Editorial   / 2018 டிசெம்பர் 24 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1906 : ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.

1913 : மிச்சிகனில் இத்தாலி மண்டபத்தில் கிறித்துமஸ் கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில், 59 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர்.

1914: முதலாம் உலகப் போர் - கிறித்துமஸ் தினத்துக்காக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

1924 : அல்பேனியா குடியரசாகியது.

1941 : இரண்டாம் உலகப் போர் - லிபியாவின் பங்காசி நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.

1941 : இரண்டாம் உலகப் போர் - மலேஷியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.

1951 : லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிஸ் லிபிய மன்னராக முடிசூடினார்.

1953 : நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் ரயில் மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், அதில் சென்று கொண்டிருந்த ரயில் ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.

1966 : அமெரிக்கப் படையினரை ஏற்றிச் சென்ற கனடா ஏர் விமானம் தெற்கு வியட்நாமில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், 129 பேர் உயிரிழந்தனர்.

1968 : மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.

1969 : வட கடலின் நோர்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

1974 : ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.

1999 : இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காட்மாண்டிற்கும், டில்லிக்கும் இடையில் கடத்தப்பட்டு, ஆப்கானித்தான், கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது. டிசம்பர் 31 இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

2005 : இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2005 : டிசம்பர் 18 இடம்பெற்ற தாக்குதலில், 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் சூடான் மீது போரை அறிவித்தது.

2008 : உகாண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ சனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X