2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : நவம்பர் 01

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1904 : இலங்கையின் வட மாகாணத்துக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.

1911 : இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன.

1914 : முதலாம் உலகப் போர் - சிலியில் ஜேர்மனியக் கடற்படையுடன் நடந்த மோதலில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்.

1918 : நியூயோர்க் நகரின் புரூக்ளினில் இடம்பெற்ற விரைவுப் போக்குவரத்து விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர்.

1918 : மேற்கு உக்ரைன் ஆஸ்திரியா - ஹங்கேரிப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.

1922 : ஒட்டோமான் பேரரசின் கடைசி சுல்தான் ஆறாம் மெகமெட் பதவியிழந்தான்.

1928 : துருக்கிய மொழி சீர்திருத்தம் ஏற்பட்டது. அரபு எழுத்துமுறை இலத்தீன் எழுத்துகளாக மாற்றப்பட்டன.

1948 : சீனாவின் மஞ்சூரியா என்ற இடத்தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் கொல்லப்பட்டனர்.

1950 : புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் அமெரிக்கத் தலைவர் ஹரி ட்ரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

1951 : நெவாடாவில் அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

1954 : புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.

1956 : இந்தியாவில் கேரளம், ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. கன்னியாகுமாரி கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து மதராஸ் மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது. நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.

1957 : அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மெக்கினா பாலம் மிச்சிகன் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1970 : பிரான்சில் நடன மாளிகை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 144 பேர் கொல்லப்பட்டனர்.

1973 : மைசூர் மாநிலம் கர்நாடகா எனப் பெயர் மாற்றப்பட்டது.

1981 : ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.

1984 : இந்திராகாந்தி படுகொலையை அடுத்து, இந்தியாவில் சீக்கியருக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன.

1993 : ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

1999 : ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது.

2000 : செர்பியாவும் மொண்டெனேகுரோவும் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

2006 : பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .