2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : நவம்பர் 28

Editorial   / 2018 நவம்பர் 28 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1905 : அயர்லாந்து தேசியவாதி ஆர்தர் கிறிஃபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் பெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.

1908 : பென்சில்வேனியாவின் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 154 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.

1912 : அல்பேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1920 : அயர்லாந்து விடுதலைப் போர் - ஐரியக் குடியரசு இராணுவத்தினர் பிரித்தானியப் படை முகாம் ஒன்றைத் தாக்கி 17 பேரைக் கொன்றனர்.

1942 : அமெரிக்காவின் பாஸ்டன் நகர இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 492 பேர் இறந்தார்கள்.

1943 : இரண்டாம் உலகப் போர் – ஜேர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில், ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் தெகுரானில் சந்தித்துப் பேசினார்கள்.

1944 : இரண்டாம் உலகப் போர் - அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.

1958 : சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.

1960 : மூரித்தானியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1964 : நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.

1965 : வியட்நாம் போர் - தென் விடநாமிற்குப் படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக பிலிப்பீன்சுஸ் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேர்டினண்ட் மார்க்கோஸ் அறிவித்தார்.

1966 : மிக்கேல் மிக்கொம்பெரோ புருண்டியின் மன்னராட்சியைக் கவிழ்த்து, தன்னை அரசுத்தலைவராக அறிவித்தார்.

1967 : வல்பெக்கூலா என்ற விண்மீன் குழாமின் முதலாவது துடிவிண்மீனை ஜோசெலின் பெல் பர்னல், அந்தோனி எவிழ்சு ஆகியோர் கண்டுபிடித்தனர்.

1971 : ஜோர்தான் பிரதமர் வாசுபி அல்-தால் பலத்தீன விடுதலை இயக்கத்தின் கருப்பு செப்டம்பர் இயக்கத்தினரால் படுகொலை செயப்பட்டார்.

1972 : பாரிஸ் நகரில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1975 : கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1979 : நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் உயிரிழந்தனர்.

1980 : ஈரான் – ஈராக் போர் - மொர்வாரிது நடவடிக்கையில் ஈராக்கியக் கடற்படை ஈராக் கடற்படையினால் அழிக்கப்பட்டது.

1987 : தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்.

1989 : பனிப்போர் - செக்கோசிலோவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

1990 : ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.

1990 : லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.

1991 : தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1994 : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

2006 : நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.

2014 : நைஜீரியாவின் கனோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் மூன்று குண்டுகள் வெடித்ததில் 120 பேர் கொல்லப்பட்டனர்.

2016: கொலம்பியாவின் மெதெயின் நகருக்கு அருகில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .