2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : பெப்ரவரி 15

Editorial   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1909 : மெக்சிக்கோ, அகபல்கோ நகரில் நாடக அரங்கு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர்.

1920 : யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.

1923 : கிரேக்கம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்ட கடைசி ஐரோப்பிய நாடானது.

1933 : மயாமியில் அமெரிக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிராங்க்ளின் ரூசவெல்ட்டைக் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த கியூசெப் சங்காரா என்பவன், பதிலாக சிகாகோ நகர முதல்வர் அன்டன் செர்மாக்கை சுட்டுக் காயப்படுத்தினான். படுகாயமடைந்த செர்மாக் மார்ச் 6 இல் இறந்தார்.

1942 : இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.

1946 : எனியாக் என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.

1950 : சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1961 : பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 73 பேரும் கொல்லப்பட்டனர்.

1989 : ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

1994 : ரஷ்யா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.

1996 : சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.

2001 : முழுமையான மனித மரபணுத்தொகை நேச்சர் இதழில் வெளியானது.

2012 : ஒந்துராசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர்.

2013 : ரஷ்யாவில் எரிவெள்ளி ஒன்று வெடித்ததில்இ 1,500 பேர் காயமடைந்தனர்.

1564 : கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர் மற்றும்  கணிதவியலாளர் பிறந்த தினம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .