வரலாற்றில் இன்று: ஜனவரி 31

1891: போர்த்துக்கல் குடியரசுப் புரட்சி ஆரம்பமாகியது.

1915: முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனி நச்சு வாயு தாக்குதல் நடத்தியது.

1943: ஜேர்மன் பீல்ட் மார்ஷல் பிரெட்ரிச் பௌலஸ் சோவியத் யூனியனிடம் சரணடைந்தார்.

1945: ஜேர்மனியினால் ஸ்டத் ஓவ் முகாமிலிருந்த சுமார் 3000 கைதிகள் பால்டிக் கடல் பகுதிக்கு அழைத்துக் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.

1946: சோவியத் யூனியனின் அரசியலமைப்பை பின்பற்றி யூகோஸ்லாவியாவில் 6 குடியரசுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது.

1950: ஹைதரசன் குண்டுத் தயாரிப்புத் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1953: வடகடல் வெள்ளம் காரணமாக நெதர்லாந்தில் 1800 பேர் பலி.

1968: அவுஸ்திரேலியாவிலிருந்து நௌரு சுதந்திரம் பெற்றது.

1996: இலங்கை மத்திய வங்கி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 86 பேர் பலியானதுடன் 1400 பேர் காயமடைந்தனர்.

1996: ஹையாகுட்டாகே வால்வெள்ளி ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் யூஜி ஹையாகுட்டாகேவினால் கண்டுபிடிக்கப்பட்டது.

2003: ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7பேர் கொல்லப்பட்டனர்.


வரலாற்றில் இன்று: ஜனவரி 31

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.