வரலாற்றில் இன்று : ஜூன் 5

1900 :  இரண்டாம் பூவர் போர் - பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.

1915 : டென்மார்க்கில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1916 : முதலாம் உலகப் போர் - உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.

1942 : இரண்டாம் உலகப் போர் – பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போரை அறிவித்தது.

1944 : இரண்டாம் உலகப் போர் - நார்மாண்டி படையிறக்கம் ஆரம்பம் - ஆயிரத்திற்கும் அதிகமான பிரித்தானியக் குண்டுவீச்சு விமானங்கள் ​ஜேர்மனியின் அத்திலாந்திக் சுவர் மீது 5,000 தொன் குண்டுகளை வீசின.

1946 : சிக்காகோவில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் உயிரிழந்தனர்.

1959 :  சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.

1963 : அயொத்தொல்லா ரூகொல்லா கொமெய்னியை ஈரான் அரசுத்தலைவர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி கைது செய்ததை அடுத்து ஈரானில் கலவரம் வெடித்தது.

1967 : ஆறு நாள் போர் ஆரம்பம் - ​இஸ்ரேலிய வான் படையினர் எகிப்தின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

1968 : ஐக்கிய அமெரிக்காவின் அரசுத் தலைவருக்கான வேட்பாளர், இராபர்ட் எஃப் கென்னடி பாலத்தீனர் ஒருவனால் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.

1969 : அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.

1974 : ஈழப்போர் - சிவகுமாரன் உரும்பிராயில் காவற்றுறையினர் சுற்றி வளைத்த போது, சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.

1979 : இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.

1981 : லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஐந்து பேர் மிக அரிதான நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டது. இதுவே எயிட்சுக்கான முதலாவது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு ஆகும்.

1984 : புளூஸ்டார் நடவடிக்கை - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் படி, சீக்கியர்களின் பொற்கோயில் மீது இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1995 : போசு - ஐன்ஸ்டைன் செறிபொருள் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.

1997 : காங்கோ குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

2000 : காங்கோவில் உகாண்டா, ருவாண்டா படையினரிடையே ஆறு நாள் போர் ஆரம்பமானது. கிசாங்கனி நகரின் பெரும் பகுதி அழிந்தது.

2004 : பிரான்சில் முதன் முதலாக ஒருபால் திருமணம் இரு ஆண்களுக்கிடையே இடம்பெற்றது.

2006 : செர்பியா செர்பிடா - மொண்டெனேகுரோவிடம் இருந்து விடுதலை பெற்றது.

2009 : பெருவில் 65 நாட்கள் கலவரங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

2015 :  மலேசியாவின் சபா மாநிலத்தில் 6.0 அளவி நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

2017 : மொண்டெனேகுரோ நேட்டோ அமைப்பில் 29 ஆவது உறுப்பினராக இணைந்து கொண்டது.

2017 : பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதாகக் குற்றஞ்சாட்டி ஆறு அரபு நாடுகள் — பகுரைன், எகிப்து, லிபியா, சவூதி அரேபியா, யேமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் —கட்டாருடனான உறவைத் துண்டித்தன.


வரலாற்றில் இன்று : ஜூன் 5

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.