வரலாற்றில் இன்று : நவம்பர் 27

1912 : மொரோக்கோவின் வடக்குக் கரையை எஸ்பானியா தனது ஆளுகைக்குள் அறிவித்தது.

 

1935 : இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் சென்னையில் இருந்து வந்திறங்கியது.

1940 : ருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை, தளபதி இயன் அண்டோனெஸ்கு கைது செய்து தூக்கிலிட்டான்.

1944 : இரண்டாம் உலகப் போர் - ஸ்டஃபோர்ட்ஷயரில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

1964 : பனிப்போர் - இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.

1971 : சோவியத்தின் 'மார்ஸ் 2' விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.

1975 : கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரியக் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1983 : கொலம்பியாவின் போயிங் 747 விமானம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொருங்கியதில், 183 பேர் கொல்லப்பட்டனர்.

1989 : ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.

2001 : ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவியாகக்கூடிய நிலையில், ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.

2005 : பிரான்சின் ஏமியென்ஸ் நகரில் உலகின் முதலாவது மனித முகமாற்றுப் பொருத்து வெற்றிகரமாக இடம்பெற்றது.

2006 : கனடாவில் பிரெஞ்ச் மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான ஹதேச இனம்' என்ற அங்கிகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.

2007 : ஈழப்போர் -  கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்.

2007 : ஈழப்போர் - இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2009 : மாஸ்கோவிற்கும், சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் விரைவு ரயில் ஒன்றில் குண்டு வெடித்ததில், 28 பேர் கொல்லப்பட்டு 96 பேர் காயமடைந்தனர்.


வரலாற்றில் இன்று : நவம்பர் 27

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.