வரலாற்றில் இன்று: பெப்ரவரி 07

1238: ரஷ்யாவின் விளாடிமிர் நகரை மொங்கோலியர்கள் தீக்கிரையாக்கினர்.

1863: நியூஸிலாந்து கரையோரத்தில் கப்பலொன்று மூழ்கியதால் 189 பேர் பலி.

1945: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிரான கடைசிக்கட்ட தாக்குதல்கள் குறித்து அமெரிக்க, ரஷ்ய, பிரித்தானிய தலைவர்கள் பால்டிக் கடல் பகுதியில் சந்தித்துப் பேசினர்.

1974: பிரிட்டனிடமிருந்து கிரனடா சுதந்திரம் பெற்றது.

1979: நெப்டியூனின் சுற்றுப்பாதைக்குள் புளுட்டோ கிரகம் வந்தமை முதல் தடவையாக கண்டறியப்பட்டது.

1986: ஹெய்ட்டியில் ஜனாதிபதி ஜீன் குளோட் நாட்டைவிட்டு வெளியேறியதால் 28வருடகால ஒரே குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.

1990: சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஏகபோக அதிகாரத்தை பகிர்ந்தளிக்க சம்மதித்தது.

1992: ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த மாஸ்ட்டிரிச் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1999: ஜோர்தான் மன்னர்  காலமானதால் அவரின் மகன் அப்துல்லா புதிய மன்னரானார்.

2009: அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் காட்டுத் தீயினால் 173 பேர் பலி.


வரலாற்றில் இன்று: பெப்ரவரி 07

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.