வரலாற்றில் இன்று : மார்ச் 05

1912 : இத்தாலியப் படையினரே முதன் முதலாக வான்கப்பல்களை படைத்துறைத் தேவைக்காகப் பயன்படுத்தினர்.

1931 : பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு – காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1933 : பெரும் பொருளியல் வீழ்ச்சி - அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் வங்கி விடுமுறையை அறிவித்து, அனைத்து வங்கிகளையும் மூடி, அவற்றின் நிதிப் பரிமாற்றங்களைத் தடை செய்தார்.

1933 : ஜேர்மானியத் தேர்தலில் ஹிட்லரின் நாட்சி கட்சி 43.9சதவீத வாக்குகளைப் பெற்றது.

1940 : யோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் உயர்பீடம் 14,700 போலந்து போர்க்கைதிகள் உட்பட 25,700 போலந்து மக்களுக்கு மரண தண்டனை அளித்து கையொப்பமிட்டது.

1942 : இரண்டாம் உலகப் போர் - ஜப்பானியப் படையினர், டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளின் தலைநகரான பத்தேவியாவைக் கைப்பற்றினர்.

1953 : சோவியத் ஒன்றியத்தின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மாஸ்கோவில் மூளை இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார்.

1964 : இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.

1970 : அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் 43 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமுலுக்கு வந்தது.

1974 : யோம் கிப்பூர்ப் போர் – இஸ்ரேலியப் படையினர் சுயஸ் கால்வாய்|சூயசு கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து பின்வாங்கினர்.

1981 : 81 என்ற பிரித்தானிய வீட்டுக் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் 1.5 மில்லியன் கணினிகள் விற்பனை செய்யப்பட்டன.

1982 : சோவியத்தின் வெனேரா 14 விண்கலம் வெள்ளிக் கோளில் தரையிறங்கியது.

2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.


வரலாற்றில் இன்று : மார்ச் 05

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.