வரலாற்றில் இன்று : மார்ச் 19

1915 : புளூட்டோவின் ஒளிப்படம் முதற்றடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.

1918 : அமெரிக்க காங்கிரஸ் நேர வலயங்களை நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கிகரித்தது.

1920 : அமெரிக்க மேலவை இரண்டாவது தடவையாக வெர்சாய் ஒப்பந்தத்தை நிராகரித்தது. (முதல் தடவை 1919 நவம்பர் 19 இல் நிராகரித்திருந்தது).

1931 : அமெரிக்காவின் நெவாடாவில் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டது.

1932 : சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனியப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின.

1945 : இரண்டாம் உலகப் போர் - ஜப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல், தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர்.

1945 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியில் அனைத்துத் தொழிற்சாலைகள், இராணுவத் தளங்கள், தொடர்பு வசதிகள் அழிக்கப்பட வேண்டும் என ஹிட்லர் ஆணையிட்டார்.

1946 : பிரெஞ்சு கயானா, குவாதலூப்பு, மர்தினிக்கு, ரீயூனியன் ஆகியன பிரான்சின் வெளிநாட்டு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.

1958 : நியூயார்க்கில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியதில், 24 பேர் உயிரிழந்தனர்.

1962 : அல்சீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1964 : பிரேசிலில் அரசுக்கு எதிராகவும் கம்யூனிசத்துக்கு எதிராகவும் 500,000 மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1965 : 1863 இல் இதே நாளில் கடலில் மூழ்கிய 50,000,000 பெறுமதியான ஜார்ஜியானா கப்பலின் எச்சங்கள் 102 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டன.

1972 : இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1982 : போக்லாந்து போர்  - அர்கெந்தீனப் ப் படையினர் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.

1988 : இந்திய அரசாங்கத்திடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19இல் சாவைத் தழுவினார்.

2002 : ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

2002 : சிம்பாப்வே மனித உரிமை மீறல்கள், தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பொதுநலவாயத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டது.

2004 : பால்ட்டிக் கடலில் 1952இல் ரஷ்ய மிக்-15 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சுவீடனின் டிசி-3 விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2004 : சீன குடியரசின் அரசுத்தலைவர் சென் சூயி-பியான் சுடப்பட்டார்.

2008 : ஜிஆர்பி 080319 பி என்ற அண்ட வெடிப்பு அவதானிக்கப்பட்டது.

2011 : லிபிய உள்நாட்டுப் போர் -  கடாபியின் படைகள் பங்காசி நகரைக் கைப்பற்றத் தவறியதை அடுத்து, பிரெஞ்சு வான் படை லிபியா மீது தாக்குதலை ஆரம்பித்தது.

2013 : ஈராக்க்கில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், 98 பேர் கொல்லப்பட்டனர். 240 பேர் காயமடைந்தனர்.

2016 : பிளைதுபாய் 981 விமானம் ரஷ்யாவில் ரஸ்தோவ் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கும் போது மோதி விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணம் செய்த அனைத்து 62 பேரும் உயிரிழந்தனர்.

2018 : சூடான் என அழைக்கப்படும் கடைசி, வெள்ளை ஆண், காண்டாமிருகம் இறந்தது.


வரலாற்றில் இன்று : மார்ச் 19

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.