வரலாற்றில் இன்று : மார்ச் 22

1916 : சீனாவின் கடைசிப் பேரரசர் யுவான் சிக்காய் முடிதுறந்தார். சீனக் குடியரசு உருவானது.

1920 : அசெரி, துருக்கி இராணுவத்தினர் குர்தியக் கும்பல்களுடன் இணைந்து நகர்னோ - கரபாக் வாழ் ஆர்மீனியர்களைப் படுகொலை செய்தனர்.

1939 : இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.

1943 : இரண்டாம் உலகப் போர் - பெலருசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாடிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

1945 : அரபு நாடுகள் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.

1960 : ஆர்தர் சாவ்லொவ், சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் சீரொளிக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.

1965 : இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.

1982 : நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

1992 : யூஎஸ்ஏர் 405 விமானம் நியூரோர்க்கின் லாகோர்தியாவில் இருந்து கிளம்பி சில நேரத்தில் விபத்துக்குள்ளாகியதில் 27 பேர் உயிரிழந்தனர்.

1995 : சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாள்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.

1997 : ஹேல் - பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது.

2004 : பாலத்தீனத்தின் சுன்னி இஸ்லாமிய ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அகமது யாசின் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2016 : பிரசெல்ஸ், வானூர்தி நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

2017 : இலண்டலில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.


வரலாற்றில் இன்று : மார்ச் 22

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.