வரலாற்றில் இன்று : மார்ச் 25

1911 : நியூயோர்க் நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1918 : பெலருஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

1931 : இஸ்க்காட்பரோ சிறுவர்கள் அலபாமாவில் கைது செய்யப்பட்டு வன்கலவிக்காகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

1941 : இரண்டாம் உலகப் போர் -  அச்சு அணி நாடுகள் அமைப்பில் யுகோஸ்லாவியா இணைந்தது.

1947 : அமெரிக்காவில் இலினோய் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற வெடிப்பில் 111 பேர் உயிரிழந்தனர்.

1949 : எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 குலாக்குகள் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.

1953 : ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.

1954 : முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்.சி.ஏ நிறுவனம் வெளியிட்டது.

1954 : இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.

1957 : மேற்கு ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகியவற்ற உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.

1965 : மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் தமது 4 நாள் 50 மைல் எதிர்ப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.

1971 : வங்காளதேச விடுதலைப் போர் - பாக்கிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

1975 : சவூதி அரேபிய மன்னர் பைசால் தனது உளப் பிறழ்ச்சி கொண்ட மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1988 : செக்கோசிலோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சிக்கு எதிராக மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

1992 : சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10 மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.

1996 : மாட்டுப் பித்தநோய் காரணமாக பிரித்தானிய மாட்டிறைச்சி மற்றும் அதன் துணைப் பொருள்களின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.


வரலாற்றில் இன்று : மார்ச் 25

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.