வரலாற்றில் இன்று: மே 16

1916: யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக, அங்குள்ள சிங்கள மக்களால் வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்டது.

 

1916: பிரித்தானியாவில் பிரான்சும் முன்னைநாள் உதுமானியப் பேரரசை ஈராக் மற்றும் சிரியா என இரண்டாகப் பிரிப்பதற்கு இரகசிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டனர்.

1920: உரோமில் ஜோன் ஒஃப் ஆர்க் திருத்தந்தை, 15ஆம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.

1929: ஹொலிவூட்டில், முதலாவது அகாதமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

1932: பம்பாயில், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1960: கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில், தியோடோர் மைமான், முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.

1966: சீனாவில் கலாசாரப் புரட்சியின் ஆரம்பத்தை, சீனப் பொதுவுடமைக் கட்சி அறிவித்தது.

1969: சோவியத்தின் வெனேரா 5 விண்ணுளவி, வெள்ளிக் கோளில் இறங்கியது..

1975: பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில், சிக்கிம் - இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.

1975:  ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.

1985: தம்பிலுவில் படுகொலைகள்- இலங்கையின் தம்பிலுவில் கிராமத்தில், அடுத்த மூன்று நாட்களில் 63 வரையான தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டனர்.

1991: ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி, அமெரிக்க சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலாவது பிரித்தானிய ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

1992: எண்டெவர் விண்ணோடம், தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.

1997: சயீரின் அரசுத் தலைவர் மொபுட்டு செசெ செக்கோ, நாட்டை விட்டு வெளியேறினார்.

2003: மொரோக்கோவில், காசாபிளாங்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2004: 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை நினைவுகூர, உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.

2005: குவைத், பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கியது.

2006: தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க, மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

2006: நியூசிலாந்துக்கு அருகில், 7.4 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.


வரலாற்றில் இன்று: மே 16

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.