2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 19

Editorial   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1839: லண்டன் உடன்படிக்கை மூலம் பெல்ஜியம் ஒரு முடியரசாக்கப்பட்டது.

1954: பாகிஸ்தானில் உருதும் வங்காளமும் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1971: முதலாவது விண்வெளி நிலையமான சல்யூட்-1 ஏவப்பட்டது.

1975: இந்தியாவின் முதலாவதுசெய்மதியான ஆர்யபட்டா ஏவப்பட்டது.

1989: அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

1993: ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை அமெரிக்க எஃப்.பி.ஐ, 51 நாட்களாக சுற்றிவளைத்ததில் அக்கட்டிடம் தீப்பற்றியது. மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ் உட்பட 87பேர் கொல்லப்பட்டனர்.

1995: அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 198பேர் பலி சுமார் 500 பேர் காயம்.

1995: சந்திரிகா - விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக அவ்வியக்கம் அறிவித்தது. அதனையடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து கடற்படையினரின் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகள் இயக்கத்தினரால் மூழ்கடிக்கப்பட்டன.

1999: ஜெர்மனியின் நாடாளுமன்றம், பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.

2005: ஜேர்மனியைச் சேர்ந்த கர்தினால் ரட்ஸிங்கர் பாப்பரசராக தெரிவானார். இவர் 16 ஆவது ஆசிர்வாதப்பர் என்ற பெயரை தெரிவு செய்தார்.

2006: நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .