2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: (16.03.2019​)

Editorial   / 2019 மார்ச் 16 , மு.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

1925 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில், 5,00 பேர் வரை உயிரிழந்தனர்.

1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை, மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.

1939 – பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை ஜேர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.

1942 – முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).

1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில், ஜேர்மனியின் வூர்சுபேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில், அமெரிக்க விமானம், 107 பயணிகளுடன் காணாமல் போனது.

1963 – பாலியில் ஆகூங்க் மலை நெருப்புக் கக்கியதில், 11,000 பேர் வரை இறந்தனர்.

1966 – ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.

1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1969 – வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

1978 – முன்னாள் இத்தாலியப் பிரதமர் ஆல்டோ மோரோ கடத்தப்பட்டார். பின்னர் இவர் படுகொல்சி செய்யப்பட்டார்.

1985 – அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991 இல் விடுதலை ஆனார்.

1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

1995 – மிசிசிப்பி அடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஏற்றுக்கொண்ட கடைசி அமெரிக்க மாநிலமானது.

2005 – இஸ்ரேல், எரிக்கோவை அதிகாரபூர்வமாக பாலத்தீனியர்களிடம் ஒப்படைந்தது.

2006 – மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு ஐ.நாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

2014 – கிரிமியாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பில் உக்ரைனில் இருந்து பிரிந்து ரஸ்யாவுடன் இணையப் பெருமான்மையானோர் வாக்களித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .