2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஏப்ரல் 09

Editorial   / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1937 : கமிக்காஸ் என்ற வானூர்தி இலண்டன் வந்தது. இதுவே ஜப்பானில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு வந்த முதலாவது வானூர்தி ஆகும்.

1940 : இரண்டாம் உலகப் போர் - வெசெரியூபங் நடவடிக்கை – டென்மார்க், நோர்வே மீது ஜேர்மனி தாக்குதலை ஆரம்பித்தது.

1947 : டெக்சாஸ், ஒக்லகோமா, கன்சாஸ் மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் உயிரிழந்தனர். 970 பேர் காயமடைந்தனர்.

1948 – ஜெருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் இஸ்ரேலியரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1953 : வார்னர் பிறதேர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான 'ஹவுஸ் ஒவ் வக்ஸ்' ஐ வெளியிட்டது.

1959 : மேர்க்குரித் திட்டம் -  ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.

1967 : போயிங் 737 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

1969 : முதலாவது பிரித்தானியத் தயாரிப்பான கான்கோர்டு 002 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

1984 : யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.

1984 : இலங்கை இராணுவ வண்டி மீது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.

1991 : ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.

1992 : முன்னாள் பனாமா அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது.

2003 : ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

2005 : இளவரசர் சார்லஸ் கார்ன்வால் இளவரசி கமில்லாவைத் திருமணம் புரிந்தார்.

2009 : சியார்சியா தலைநகர் திபிலீசியில், 60,000 பேருக்கு மேல் மிக்கைல் சாக்கஷ்விலி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

2013 : ஈரானில் 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர். 850 பேர் காயமடைந்தனர்.

2017 : எகிப்தில் டன்டா, அலெக்சாந்திரியா நகரங்களில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் 47 பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .