2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 15

Editorial   / 2021 ஏப்ரல் 15 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

1865: நாடக அரங்கொன்றில் முதல்நாள் சுடப்பட்டு கோமா நிலையிலிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் உயிரிழந்தார்.

1896: முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா கிறீஸின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது.

1912: நியூயோர்க்கை நோக்கிய தனது கன்னிப் பயணத்தின்போது பனிப்பாறையில் மோதிய 269 மீற்றர் நீளமான,  பிரிட்டனின்  ஆர்.எம்.எஸ்.டைட்டானிக் கப்பல் அதிகாலை 2.20 மணியளவில் மூழ்கியது. 1517 பயணிகள் பலியாகினர்.

1989: பிரிட்டனின் ஹில்ஸ்பரோ நகரில் கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது சன நெரிசலில் சிக்கி லிவர் பூல் கழக ரசிகர்கள் 96 பேர் பலியாகினர்.

2002: சீன விமானமொன்று தென்கொரியாவின் பூஸான் பிராந்திய மலையில் மோதி சிதறியதால் 128 பேர் பலி.

2010: ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து சாம்பல் பரவியதால் ஐரோப்பாவின் பல பகுதிகள் வான் போக்குவரத்து பலநாட்கள் பாதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X