2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 26

Menaka Mookandi   / 2018 ஏப்ரல் 26 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

1942: மஞ்சுகோ நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில், 1,549 சீன சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

 

1945: இரண்டாம் உலகப் போர் - நாட்சி, ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல், போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.

1954: இந்தோனேஷியா, சீனா மற்றும் கொரியாவில் அமைதியைக் கொண்டுவரும் முகமாக, ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.

1960: ஏப்ரல் புரட்சியை அடுத்து, தென்கொரியாவின் அரசத் தலைவர் சிங்மான் ரீ, 12 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் பதவி விலகினார்.

1962: நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம், சந்திரனில் மோதியது.

1964: தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு, தன்சானியா என ஒரு நாடாகியது.

1966: தாஷ்கந்து நகரில், 5.1 ரிஷ்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1981: ஈழப்போர் - மட்டக்களப்பு - பட்டித்திடல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள்,  படுகொலை செய்யப்பட்டனர்.

1982: தென் கொரியாவின் முன்னாள் காவற்துறை அதிகாரியொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1986: சோவியத் ஒன்றியம், உக்ரைனின் செர்னோபினில், அணு உலை விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.

1989: உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல்காற்று, பங்களாதேஷின் நடுப்பகுதியத் தாக்கியதில், 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 பேர் - வீடுகளை இழந்தனர்.

1994: ஜப்பானில், சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதி,ல் அதில் பயணம் செய்த 271 பேரில் 264 பேர் உயிரிழந்தனர்.

2005: 29 ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர், சிரியா தனது 14,000 இராணுவத்தினரை, லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X