2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 27

Editorial   / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

1124: முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான்.

1296: இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னன், டன்பார் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்தரைத் தோற்கடித்தான்.

1521: நாடுகாண் பயணி பேர்டினண்ட் மகலன், பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.

1522: மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில், பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்துப் படையினரை ஸ்பானியப் படையினர் தோற்கடித்தனர்.

1565: பிலிப்பீன்சின் முதலாவது ஸ்பானியக் குடியேற்ற நாடான சேபு அமைக்கப்பட்டது.

1667: பார்வையற்ற ஜோன் மில்ட்டன், தான் எழுதிய பரடைஸ் லொஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.

1813: 1812 போர் - ஐக்கிய அமெரிக்கப் படைகள், ஒண்டாரியோவின் தலைநகர் யோர்க்கை கைப்பற்றினர்.

1840: லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது.

1865: அமெரிக்காவில் மிசிசிப்பி நதியில் கப்பலொன்று வெடிப்புக்குள்ளாகி  மூழ்கியதால், 1700 பேர் பலி.

1904: அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை, அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்தது.

1909: துருக்கியின் சுல்த்தான் இரண்டாம் அப்துல் ஹமீட், பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெஹ்மெட் ஆட்சிக்கு வந்தான்.

1941: இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனியப் படைகள், கிரேக்கத் தலைநகர் எதன்ஸ் நகரை அடைந்தனர்.

1945: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸோலினி, ஜேர்மன் சிப்பாய் போல் வேடமணிந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது கிளர்ச்சியாளர்ளால் கைது செய்யப்பட்டார்.

1959: மக்கள் சீனக் குடியரசில் இருந்து, கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.

1960: பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ், ஐ.நா.வின் நேரடி ஆட்சியின் கீழிருந்த டோகோ விடுதலை அடைந்தது.

1961: சியேரா லியோனி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1967: கனடாவின் மொன்ட்ரியால் நகரில், எக்ஸோ 67 கண்காட்சி ஆரம்பமானது.

1974: அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கெதிராக, வொஷிங்டன் டிசியில் 10,000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர்.

1978: இராணுவப் புரட்சியை அடுத்து, ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி, ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது.

1981: Xerox PARC நிறுவனத்தினால் கணினி மௌஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

1992: பிரித்தானிய நாடாளுமன்றத்தின் 700 வரலாற்றில் முதல் தடவையாக பெண்ணொருவர் (பெட்டி பூத்ரோய்ட்) சபாநாயகராக தெரிவானார்.

1992: ரஷ்யாவும் ஏனைய முன்னாள் சோவியத் குடியரசுகளும் உலக வங்கி, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்தன.

1993: ஸாம்பியாவின் தேசிய கால்பந்தாட்ட அணி வீரர்கள் அனைவரும் விமான விபத்தொன்றில் இறந்தனர்.

1994: தென்னாபிரிக்காவில் முதலாவது ஜனநாயக பொதுத்தேர்தல் நடைபெற்றது.

1996: லெபனான் யுத்தம் முடிவுற்றது.

2001: தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.

2005: எயார்பஸ் A380 எனும் பாரிய  விமானம் தனது முதல் பறப்பை பிரான்ஸில் மேற்கொண்டது.

2007: எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செம்படையின் நினைவுச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.

2021: சீன பாதுகாப்புத்துறை  அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கே (Wei Fenghe) இலங்கைக்கு விஜயமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .