2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 28

Editorial   / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

1792: ஆஸ்திரிய நெதர்லாந்து (தற்போதைய பெல்ஜியம்) மீது பிரான்ஸ் படையெடுத்தது.

1920:சோவியத் யூனியனுடன் அஸர்பைஜான் இணைக்கப்பட்டது.

1930: முதலாவது இரவுநேர கூடைப்பந்தாட்டப்போட்டி அமெரிக்காவின் கான்ஸாஸ் நகரில் நடைபெற்றது.

1932: மனிதர்களின் மஞ்சள் காமாலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1945:இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும் அவரின் காதலியும் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.

1952: இரண்டாவது சீன – ஜப்பானிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சீன – ஜப்பானிய சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1969: பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள்ஸ் டி கோல் ராஜினாமா செய்தார்;.

1970: வியட்நாமில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதற்கு அமெரிக்கத் துருப்புகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் அதிகாரிமளித்தார்.

1978: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மொஹமட் தாவூத் கான், கம்யூனிஸ்ட் சார்பு கிளர்ச்சியாளர்களால் சதிப்புரட்சியொன்றில் பதவி கவிழ்க்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

2001: அமெரிக்க கோடீஸ்வரர் டென்னிஸ் டிட்டோ முதலாவது விண்வெளி சுற்றுலா பயணியானார்.

2008: சீனாவில் ஷான்டோங் நகரில் ரயில் விபத்தொன்றில் 72 பேர் பலியாகினர்.

2021: சீன பாதுகாப்புத்துறை  அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கே (Wei Fenghe)  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

2021: அசாமில் ரிச்டர் அளவில் முறையே 6.4, 4.5, 4.4 என அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .