2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : ஒக்​​​​டோபர் 17

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1907 : மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.

1912 : முதலாம் பால்க்கன் போர் – பல்கேரியா, கிரேக்கம், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.

1917 : முதலாம் உலகப் போரில் ஜேர்மனி பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.

1933 : அல்பர்ட் ஐன்ஸ்டீன் நாசி ஜேர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.

1941 : இரண்டாம் உலகப் போரில் முதற்தடவையாக ஜேர்மனிய நீர்மூழ்கி கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.

1961 : பாரிஸ் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1965 : 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.

1966 : நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.

1979 : அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1995 : யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.

1998 : நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1,200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

2003 : தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி ஆனது.

2006 : ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.

2006 : ஈழப்போர் - புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X