2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஒக்டோபர் 10

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1911 : வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.

1916 : வட இலங்கை அமெரிக்க மிசன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை குருமடத்தில் கொண்டாடியது.

1928 : சங் கை செக் சீனக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1933 : யுனைடெட் ஏயர்லைன்ஸ் போயிங் 247 விமானம் நடுவானில் வெடித்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

1935 : கிரேக்கத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.

1942 : சோவியத் ஒன்றியம் ஆத்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.

1945 : போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனப் பொதுவுடமைக் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தன. இது இரட்டைப் பத்தாவது உடன்பாடு என அழைக்கப்படுகிறது.

1949 : விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.

1957 : ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது.

1967 : விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் ஜனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

1970 : பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1970 : மொண்ட்ரியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணித் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.

1971 : விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட இலண்டன் பாலம் அரிசோனாவின் லேக் அவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.

1975 : பப்புவா நியூ கினி ஐநாவில் இணைந்தது.

1980 : வடக்கு அல்சீரியாவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2,633 பேர் உயிரிழந்தனர்.

1986 : எல் சால்வடோர் தலைநகர் சான் சல்வடோரில் 5.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.

1987 : விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

1991 : தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1997 : உருகுவையில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்தனர்.

1998 : காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கிண்டு நகரில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 41 கொல்லப்பட்டனர்.

2010 : நெதர்லாந்து அண்டிலிசு நாடு என்ற வகையில் கலைக்கப்பட்டது.

2015 : துருக்கியின் தலைநகர் அங்காராவில் முக்கிய தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில், 102 பேர் உயிரிழந்தனர். 400 பேர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X