2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 13

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 13 , மு.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

1792: பிரெஞ்சு மன்னன் 16 ஆம் லூயி தேசிய விசாரணை மன்றத்தினால் கைது செய்யப்பட்டு மக்களின் எதிரியாக பிரகடனப்படுத்தப்பட்டான்.1960: சாட் நாடு பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

 


1961: கிழக்கு ஜேர்மனியிலிருந்து மேற்கு ஜேர்மனிக்கு மக்கள் தப்பிச்செல்வதை தடுப்பதற்காக பேர்லின் நகரத்தின் கிழக்கு மேற்கு பகுதிகளை பிரிக்கும்விதமாக கிழக்கு ஜேர்மன் அரசாங்கம் வேலி அமைத்தது.

1969: சந்திரனிலிருந்து திரும்பிய அப்பலோ 11 விண்வெளி வீரர்கள் 3 வாரகாலம் பரிசோதிக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டனர்.

1978: லெபனானின் பெய்ரூத் நகரில் சுமார் 150 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

2004: கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.

2004: புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

2004: கிறீஸின் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகியது.

2006: யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2008: அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப், ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X