2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 13

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1905 : சுவீடனில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக நோர்வே மக்கள் வாக்களித்தனர்.

1913 : ஹரி பிறியர்லி என்ற ஆங்கிலேயர் துருவேறா எஃகைக் கண்டுபிடித்தார்.

1918 : அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவில் முதல்தடவையாகப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

1920 : போலந்து – சோவியத் போர் வார்சாவாவில் ஆரம்பமாயிற்று. ஓகஸ்ட் 25 இல் முடிவடைந்த இப்போரில் சோவியத் செஞ்சேனை தோற்றது.

1937 : இரண்டாம் சீன -  ஜப்பானியப் போர் - சாங்காய் சமர் ஆரம்பமானது.

1954 : பாக்கிஸ்தான் வானொலி பாக்கிஸ்தான் நாட்டுப்பண்ணை முதல் தடவையாக ஒலிபரப்பியது.

1960 : மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1961 :  பனிப்போர் - கிழக்கு ஜேர்மனி தனது குடிமக்கள் தப்பிச் செல்லாதவாறு பெர்லினின் கிழக்கு, மேற்கு எல்லையை மூடி பெர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.

1964 : ஐக்கிய இராச்சியத்தில் கடைசித் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1968 : கிரேக்க அரசுத்தலைவர் கியார்கியஸ் பப்படப்பவுலஸ் மீது ஏதென்ஸ் நகரில் கொலை முயற்சி இடம்பெற்றது.

1969 : அப்பல்லோ -  11 விண்வெளி வீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தார்கள்.

1978 : லெபனான் உள்நாட்டுப் போரின் இரண்டாம் கட்டமாக பெய்ரூத் நகரில் 150 பாலத்தீனர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

2004 : 156 கொங்கோ துட்சி அகதிகள் புருண்டியில் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 : மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.

2004 : 28 ஆவது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.

2006 : புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல் -  யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில், 18 பேர் கொல்லப்பட்டனர். 54 பேர் காயமடைந்தனர்.

2015 : பகுதாது நகரில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர். 212 பேர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .