2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 16

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1819 : இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.

1865 : 4 ஆண்டுகள் ஸ்பானியரின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.

1868 : பெருவில் அரிக்கா (இன்றைய சிலியில்) இடம்பெற்ற 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர்.

1945 : ஜப்பானியப் பிரதமர் கண்டாரோ சுசுக்கி மீது கொலை முயாற்சி மேற்கொள்ளப்பட்டது.

1945 : சீனாவின் கடைசி மன்னன் பூயி சோவியத் படைகளினால் கைப்பற்றப்பட்டான்.

1964 : தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டோங் வான் மின் பதவியகற்றப்பட்டார்.

1987 : அமெரிக்காவின் மிச்சிகனில் ஆனு - 82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில், 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4 வயது குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.

2005 : வெனிசுவேலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில், 160 பேர் உயிரிழந்தனர்.

2006 : இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .