2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 23

Editorial   / 2018 ஓகஸ்ட் 23 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1914 : முதலாம் உலகப் போர் - ஜப்பான் ஜேர்மனியுடன் போரை அறிவித்தது.

1921 : பிரித்தானிய வான்படைக் கப்பல் ஆர்-38 இங்கிலாந்தில் மூழ்கியதில், 49 பிரித்தானிய, அமெரிக்கப் படையினரில், நால்வர் மட்டுமே உயிர் தப்பினர்.

1929 : பாலத்தீனத்தில் எபிரோன் நகரில் அரபுக்கள் யூதர்களைத் தாக்கி, அவர்களில் 65 பேரைக் கொன்றனர். ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

1939 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.

1942 : இரண்டாம் உலகப் போர் - சுடாலின்கிராட் சண்டை ஆரம்பமானது

1943 : இரண்டாம் உலகப் போர் - கார்கீவ் விடுவிக்கப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போர் - மர்சேய் கூட்டுப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.

1944 : இரண்டாம் உலகப் போர் - உருமேனியா மன்னர் மைக்கேல் நாட்சி - ஆதரவு அரசை ஏற்க மறுத்தார். அரசுத்தலைவர் இயோன் அந்தனெசுக்கு கைது செய்யப்பட்டார். உருமேனியா கூட்டுப் படைகளுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்தது.

1948 : 44 நாடுகளில் இருந்து 147 திருச்சபைகள் இணைந்து 'திருச்சபைகளின் உலகப் பேரவை' என்ற அமைப்பு நிறுவப்பட்டது.

1948 : ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.

1966 : 'லூனார் ஆர்பிட்டர் 1' விண்கலம் முதல் தடவையாக நிலாவின் சுற்றுவட்டத்திருந்து பூமியைப் படம் பிடித்தது.

1973 : சுவீடன், ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளை ஒன்று பணயக் கைதிகள் விவகாரமாக உருவெடுத்தது. அடுத்த ஐந்து நாட்களில் பணயக் கைதிகள் கொள்ளைக்காரர்களுக்குப் பரிவு காட்ட ஆரம்பித்தனர். இது 'இசுட்டாக்கு கோம் நோய்க்கூட்டறிகுறி' என்ற சொற்றொடரை உருவாக்கியது.

1989 : பாடல் புரட்சி – எசுத்தோனியா, லாத்வியா லித்துவேனியாவைச் சேர்ந்த இரண்டு மில்லியன் மக்கள் வில்னியஸ் – தாலின் நெடுஞ்சாலையில் கைகோர்த்து பாடல்கள் பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1990 : ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1990 : ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.

1990 : மேற்கு மற்றும் கிழக்கு ஜேர்மனி ஆகியன அக்டோபர்  இல் இணையவிருப்பதாக அறிவித்தன.

1991 : உலகளாவிய வலை பொது மக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.

2000 : கல்ஃப் ஏர் விமானம் பாரசீக வளைகுடாவின் மனாமா அருகே வீழ்ந்ததில், 143 பேர் உயிரிழந்தனர்.

2006 : நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.

2007 : 1918 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட ரஷ்சியப் பேரரசின் கடைசி அரச குடும்பத்தினரான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் எச்சங்கள் ரஷ்யாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.

2011 : லிபிய உள்நாட்டுப் போர் - லிபியத் தலைவர் முஅம்மர் அல் கதாஃபி அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். தேசிய இடைக்காலப் பேரவை ஆட்சியைக் கைப்பற்றியது.

2013 : பொலிவியாவில் சான்ட்டா குரூசு டெ லா சியேறா நகரில் இடம்பெற்ற சிறைக் கைதிகளின் கலவரத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X