2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 7

Editorial   / 2018 ஓகஸ்ட் 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1906 : கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது, முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

1927 : ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

1933 : ஈராக்கில் சிமேல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

1942 : இரண்டாம் உலகப் போர்  -  அமெரிக்கக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

1944 : ஆர்வர்டு மார்க் ஐ என்ற முதலாவது நிரல் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

1945 : இரண்டாம் உலகப் போர் - ஹிரோசிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1955 : சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை ஜப்பானில் விற்பனைக்கு விட்டது.

1960 : ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 :  தாலிடோமைடு என்ற மருந்தைப் பரிந்துரைக்க மறுத்த கனடிய - அமெரிக்க மருந்தியலாளர், பிரான்செஸ் கெல்சிக்கு அமெரிக்க அரசுத்தலைவரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

1970 : இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1967 இல் ஆரம்பமான தேய்வழிவுப் போர் முடிவுற்றது.

1976 : வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.

1987 : லினி காக்சு பெரிங் நீரிணையைக் கடந்து, அமெரிக்காவில் இருந்து சோவியத் ஒன்றியம் வரை நீந்திய முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1989 : எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் மிக்கிலே லண்டு உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

1990 : வளைகுடாப் போரின் ஒரு பகுதியாக முதலாவது தொகுதி அமெரிக்கப் படையினர் சவூதி அரேபியா வந்து சேர்ந்தனர்.

1998 : தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில், 212 பேர் கொல்லப்பட்டு 4,500 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1999 : செச்சினிய - ஆதரவு இஸ்லாமிய தீவிரவாதிகள் தாகெஸ்தானுள் ஊடுருவினர்.

2006 : இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.

2008 : தெற்கு ஒசேத்தியா தொடர்பான ரஷ்சிய - ஜோர்ஜியப் போர் ஆரம்பமானது.

2017 : இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில், பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்த 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் ஒக்சிஜன் தரப்படாமல் இறந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .