2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 03

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1914 : அல்பேனிய இளவரசர் வில்லியம் அவரது ஆட்சியின் மீது ஏற்பட்ட பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.

1916 : முதலாம் உலகப் போர் - வடக்கு இலண்டனில் ஜேர்மனிய வான்கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது. பிரித்தானியாவில் வீழ்த்தப்பட்ட முதலாவது ஜேர்மனிய வான்கப்பல் இதுவாகும்.

1933 : சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் புள்ளியான பொதுவுடமை முனையை யெவ்கேனி அப்லாக்கொவ் எட்டினார்.

1939 : இரண்டாம் உலகப் போர் - போலந்து மீதான ஜேர்மனியின் படையெடுப்பை அடுத்து பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன ஜேர்மனி மீது போர் தொடுத்தன. நேசப் படைகள் என்ற அமைப்பை அவர்கள் ஏற்படுத்தினர்.

1939 : இரண்டாம் உலகப் போர் -  ஐக்கிய இராச்சியமும் பிரான்ஸூம்  ஜேர்மனி மீது கடல் - வழித் தடையை ஏற்படுத்தின.

1943 : இரண்டாம் உலகப் போர் - நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு ஆரம்பமானது. இதே நாளில் அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர், இத்தாலியத் தளபதி பீத்ரோ பாதொக்லியோ ஆகியோருக்கிடையில் இத்தாலி நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தம் மால்ட்டாவில் அரச கடற்படைப் போர்க்கப்பல் ஒன்றில் கையெழுத்திடப்பட்டது.

1944 : பெரும் இன அழிப்பு - நாட்குறிப்பாளர் ஆன் பிராங்க்கும் அவரது குடும்பமும் அவுஷ்விட்ஸ் வதை முகாமுக்கு புறப்பட்டனர். இவர்கள் மூன்று நாட்கள் கழித்து அங்கு வந்தடைந்தனர்.

1954 : மக்கள் விடுதலை இராணுவம் சீனக் குடியரசு - கட்டுப்பாட்டுப் பகுதியான கீமோய் தீவு மீது எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்தன. முதலாவது தைவான் நீநிணை நெருக்கடி ஆரம்பமானது.

1967 : சுவீடனில் இடது பக்க வாகன ஓட்டம் வலப்பக்கமாக ஒரே இரவில் மாற்றப்பட்டது.

1971 : கத்தார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 : அமெரிக்காவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.

1987 : புருண்டி இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சான் - பாப்டிஸ்ட் பகாசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1997 : வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் நோம் பென் விமான நிலையம் அருகே வீழ்ந்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.

2004 : பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் -  ரஷ்யாவின் வடக்கு ஒசேத்திய -அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வில் மொத்தம் 186 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தீவிரவாதிகள் உட்பட 385 பேர் கொல்லப்பட்டனர்.

2017 : வட கொரியா தனது ஆறாவதும், மிகவும் ஆற்றல் மிக்கதுமான அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .