2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜனவரி 06

Editorial   / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1900 : இரண்டாம் பூவர் போர் - பூவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1907 : மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரோமில் ஆரம்பித்தார்.

1912: நியூ மெக்சிக்கோ 47ஆவது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.

1912 : கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை ஜேர்மனிய புவியியற்பியலாளர் அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.

1928 : தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில், 14 பேர் உயிரிழந்தனர்.

1929 : யுகொஸ்லாவிய மன்னர் முதலாம் அலெக்சாண்டர் நாட்டின் அரசியலமைப்பைத் தடை செய்தார்.

1929 : அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.

1930 : முதலாவது டீசல் - ஆற்றல் தானுந்து சேவை அமெரிக்காவில் இந்தியானாபோலிஸ் முதல், நியூயார்க் நகரம் வரை நடத்தப்பட்டது.

1936 : கலாசேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.

1940 : இரண்டாம் உலகப் போர் - போலாந்தின் பொஸ்னான் நகரில் நாட்சி ஜேர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.

1946 : வியட்நாமில் முதல் தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.

1947 : உலகைச் சுற்றி வருவதற்கான முதலாவது பயணச்சீட்டை பான் அமெரிக்கன் ஏர்வேய்ஸ் விற்பனைக்கு விட்டது.

1950 : ஐக்கிய இராச்சியம் சீனாவை அங்கிரித்தது. சீனக் குடியரசு ஐக்கிய இராச்சியத்துடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது.

1951 : கொரியப் போர் – 200 – 1,300 வரையான தென்கொரிய கம்யூனிஸ ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1959 : பிடெல் காஸ்ட்ரோ கவானாவை அடைந்தார்.

1960 : ஈராக்கில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

1960 : நியூயார்க்கில் இருந்து மயாமி நோக்கிச் சென்று கொண்டிருந்த நேசனல் ஏர்லைன்ஸ் 2511 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர்.

1974 : 1973 எண்ணெய் நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பமானது.

1989 : இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1992 : ஜார்ஜியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் சிவியாத் கம்சகூர்தியா நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

1993 : ஜம்மு காஷ்மீரில் சோப்போர் என்ற இடத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினர் 55 காஷ்மீரியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.

2007 : கொழும்பிலிருந்து 36கி.மீ தொலைவில் நிட்டம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில், 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.

2007 : இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 55 பேர் கொல்லப்பட்டனர்.

2007 : இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.

2017 : அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் துப்பாக்கி நபர்கள் சுட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .