2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 07

S. Shivany   / 2021 ஜனவரி 07 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.

1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார்.

1738 – போபால் போரில் மராட்டியர்கள் வெற்றிபெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

1785 – பிளான்சார்ட் என்ற பிரான்சியர் வளிம ஊதுபை ஒன்றில் இங்கிலாந்து டோவர் துறையில் இருந்து பிரான்சின் கலே வரை பயணம் செய்தார்.

1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.

1846 – இலங்கையில் தி எக்சாமினர் என்ற ஆங்கில செய்திப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.

1894 – வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் திரைப்படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.

1935 – பெனிட்டோ முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

1939 – மார்கெரிட் பெரே என்பவர் பிரான்சியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். இயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடைசித் தனிமம் இதுவாகும்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பைன்சில் பட்டான் மீதான முற்றுகையை யப்பான் ஆரம்பித்தது.

1950 – அமெரிக்காவில் அயோவா மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

1954 – இயந்திர மொழிபெயர்ப்பு முதன்முறையாக நியூயோர்க் ஐபிஎம் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கிகரித்தது.

1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.

1972 – எசுப்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் உயிரிழந்தனர்.

1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் நோம் பென் வீழ்ந்தது. போல் போட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.

1984 – புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.

1985 – ஜப்பானின் முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் முதலாவது விண்ணுளவி ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.

1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

1991 – எயிட்டியின் முன்னாள் தலைவர் ரொஜர் லபோட்டாண்ட் இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வி கண்டு, பின்னர் கைதுசெய்யப்பட்டார்.

1999 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது.

2005 – இத்தாலியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

2006 – திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.

2012 – நியூசிலாந்தில் கார்ட்டர்ட்டன் நகரில் வெப்ப வளிம ஊதுபை ஒன்று வெடித்ததில், அதில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர்.

2015 – பாரிஸ் நகரில் சார்லி எப்டோ அலுவலகங்களில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர். 2015 – யேமன்- சனா நகரில் வாகனக் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றதில் 38 பேர் கொல்லப்பட்டானர், 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .