2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 11

Editorial   / 2019 ஜூன் 11 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1901 : நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.

1903 : செர்பியாவில் அதிகாரிகள் குழுவொன்று அரசர் மாளிகையைத் தாக்கி மன்னர் அலெக்சாந்தர் ஒப்ரெனோவிச்சையும், அரசி திராகாவையும் படுகொலை செய்தனர்.

1917 : கிரேக்க இராச்சியத்தின் மன்னராக அலெக்சாந்தர் முடி சூடினார்.

1935 : அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சி, அல்ப்பைனில் அறிமுகப்படுத்தினார்.

1937 : பெரும் துப்புரவாக்கம் - சோவியத் ஒன்றியத்தில் யோசப் ஸ்டாலினின் உத்தரவுப்படி எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1940 : இரண்டாம் உலகப் போர் - மால்ட்டா மீது முதற்றடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.

1942 : இரண்டாம் உலகப் போர் - அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துக்கு கடன் - ஒப்பந்தத்தில் நிவாரணம் வழங்க ஒப்புக் கொண்டது.

1955 : பிரான்சில் நடைபெற்ற தானுந்து ஓட்டப் பந்தயம் ஒன்றில் இரண்டு தானுந்துகள் மோதிக் கொண்டதில் 83 பார்வையாளர்கள் உயிரிழந்தனர். 100 பேர் வரை காயமடைந்தனர்.

1956 : கல்லோயா படுகொலைகள் -  இலங்கையின் வடக்கே கல்லோயாவில் சிங்களக் குடியேற்றிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1963 : தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.

1968 : உலகத் தமிழ்க் கழகம் தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டது.

1981 : ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர்.

1991 : ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டார்.

2002 : அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.

2004 : நாசாவின் காசினி-ஐசென் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.

2007 : கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் சிட்டகொங் நகரில் மண்சரிவு காரணமாக 130 பேர் உயிரிழந்தனர்.

2012 : ஆப்கானித்தானில் இடம்பெற்ற இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு நிலச்சரிவை ஏற்படுத்தியதில் ஒரு கிராமமே மூழ்கியது, 80 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .