2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 18

Editorial   / 2018 ஜூலை 18 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1900  : சீனாவின் பேரரசி டோவாகர் சிக்சி வெளிநாட்டுத் தூதுவர், அவர்களது குடும்பத்தினர் உட்பட சீனாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் கொல்லப்பட வேண்டும் என, ஆணை பிறப்பித்தார்.

1908  :  ஜப்பானியர்கள் 781 பேர் பிரேசிலின் சான்டோஸ் கரையை அடைந்ததுடன் ஜப்பானி குடியேற்றம் அங்கு ஆரம்பித்தது.

1908  :  பிலிப்பைன்சு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1928  :  வானோடி அமேலியா ஏர்ஃகாட் அத்திலாந்திக்குப் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1946  :  சமூகவுடைமைவாதி ராம் மனோகர் லோகியா போத்துக்கீசருக்கு எதிராக கோவாவில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

1948  :  கொலொம்பியா ரெக்கார்ட் நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை நியூயார்க்கில் வெளியிட்டது.

1948  :  மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து, அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

1953 :  1952 எகிப்தியப் புரட்சி முடிவுக்கு வந்தது. முகமது அலி வம்சம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1953 :  ஐக்கிய அமெரிக்க வான்படையைச் சேர்ந்த சி - 24 விமானம் ஜப்பான், தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.

1954  :  அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது.

1965 – வியட்நாம் போர் - அமெரிக்கா பி - 52 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணி கரந்தடி வீரகளைத் தாக்கியது.

1972 :  பிரித்தானிய பயணிகள் விமானம் ஒன்று இலண்டன் ஈத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் தரையில் மோதி வெடித்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.

1981 :  அமெரிக்காவில் மசாஸ்செட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1981  :  கரவு தொழினுட்பத்தைக் கொண்டு தயாரான முதலாவது வானூர்தி லொக்கீட் எப் - 117 நைட்கோக் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.

1983  :  சாலஞ்சர் விண்ணோடம் - சாலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.

1983 :  பகாய் சமயத்தைப் பின்பற்றியமைக்காக ,10 பகாய் பெண்கள் ஈரான் சீராஸ் நகரில் தூக்கிலிடப்பட்டனர்.

1985 : விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.

1994  :  வட அயர்லாந்தில் இரவு விடுதி ஒன்றில் 1994 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை,  தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அல்ஸ்டர் படையினர் சுட்டதில் ஆறு கத்தோலிக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.  ஐந்து பேர் காயமடைந்தனர்.

2006 :  கசகஸ்தானின் முதலாவது செயற்கைக்கோள், காஸ்சாட் ஏவப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X