2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 30

Editorial   / 2018 ஜூலை 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1905 : சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.

1910 : இலங்கையில் ஐந்து சத, செப்பு நாணயம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.

1908 : புவியில் மாபெரும் உந்த நிகழ்வு சைபீரியாவில் இடம்பெற்றது. எனினும் எவரும் உயிரிழக்கவில்லை.

1912 : கனடாவில் ரெஜினா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.

1919 : நாவற்குழியூர் நடராசன், இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் பிறந்த தினமாகும்.

1922 : டொமினிக்கன் குடியரசில் அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர, இரு நாடுகளுக்கும் இடையில் வாசிங்டன் டி. சி.யில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1934 : ஹிட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை நீள் கத்திகளுடைய இரவு ஜேர்மனியில் நிகழ்ந்தது.

1937: உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) இலண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1941 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜேர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.

1944 : இரண்டாம் உலகப் போர் - முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து, செர்போர்க் சண்டை முடிவடைந்தது.

1956 : அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்குப் பகுதியில், நடுவானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த 128 பேரும் உயிரிழந்தனர்.

1959 : அமெரிக்க வான்படை விமானம் ஒன்று ஜப்பானில் ஓக்கினாவாவில் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில், 11 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

1960 : கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1969 : சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாளர் பிறந்த தினமாகும்.

1971 : சோவியத்தின் சோயுஸ் 11, விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.

1972 : ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் நொடி அதிகரிக்கப்பட்டது.

1977 : தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.

1985 : பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த, 39 அமெரிக்க விமானப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

1990 : கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.

1997 : முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.

1997 : ஆங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.

2002 : பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.

2013 : எகிப்தில் அரசுத்தலைவர் முகம்மது முர்சிக்கும், ஆளும் விடுதலை மற்றும் நீதிக் கட்சிக்கும் எதிரான போராட்டம் ஆரம்பமானது.

2015 : இந்தோனேசியாவின் மேடான் பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில், 116 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .